Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 13
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tourist Places
சுற்றுலாத் தலங்கள்

சுருளி அருவி

உ. தாமரைச்செல்வி


தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்று சுருளி நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சியில் வருடத்தில் 365 நாட்களும் தண்ணீர் விழுந்து கொண்டிருககிறது. குறிப்பிட்ட கால வரையறையில்லாத இந்த நீர்வீழ்ச்சிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தின் வனத்துறைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பாதுகாப்பாய் குளிப்பதற்கு தகுந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பெண்கள் குளித்து முடித்த பிறகு உடை மாற்றிக் கொள்வதற்கு நீர்வீழ்ச்சிக்கருகிலேயே தனித்தனி அறைகள் கட்டிவிடப்பட்டிருக்கிறது.சுருளிவேலப்பர் கோயில்

சுருளி நீர்வீழ்ச்சிப் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சென்றால் சுருளி வேலப்பர் கோயிலை அடையலாம். முருகன் கோயிலான இக்கோயில் சிறிய அளவில் உள்ளது. இந்தக் கோயிலின் கீழ்ப்பகுதியில் உள்ள குகையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் அரக்கர்களுக்குப் பயந்து இங்கு வந்து மறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குகையில் இமயகிரிச்சித்தர் என்பவர் வந்து தவம் செய்ததாக இங்கிருக்கும் விளம்பரப் பலகைகள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தக் குகையில் சிறிய லிங்கம் ஒன்றும் அதன் முன்பு விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதை உள்நோக்கிப் பார்த்தால் தெரிகிறது. தினமும் இந்தக்குகையினுள் சென்று பக்தர்கள் யாராவது விளக்குக்கு ஒளியூட்டி விடுகிறார்கள். இந்தக் குகையிலிருந்து சிறிதாக நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் தனியாகச் சென்று விழுகிறது. இந்த நீரைப் புனித நீராகக் கருதி பக்தர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்தக் குகைக்கு அடுத்ததாக அஷ்ட நாக குகை சப்த கன்னிமார்கள் சன்னதி ஒன்றும் உள்ளது.புண்ணியத்தலம்

1. இந்த சுருளிமலைப் பகுதி முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் வந்திருந்த இடமாகவும் , புனிதமான இடமாகவும் இந்து சமயத்தவர்களால் கருதப்படுவதால் இது ஒரு புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது.

2. தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டில் இறப்பு நிகழ்ந்திருந்தால் அதன் பின்பு செய்யப்படும் ஒரு ஆண்டு நிறைவு, திதி மற்றும் புண்ணியாதானம் போன்ற நிகழ்வுகளை இங்கு வந்து செய்கின்றனர். ஒற்றைப்படை எண்ணிக்கையில் (அவரவர் வசதிக்கேற்ப எண்ணிக்கை இருக்கலாம்) இந்தப் பகுதியில் உள்ள சாமியார்களை அழைத்து அவர்களுக்கு உடை, உணவு மற்றும் காணிக்கை அளித்து வேண்டுகின்றனர்.

அவர்கள் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றனர். புரோகிதர்களைக் கொண்டு ஆற்றங்கரையிலும் இதுபோன்ற சில நிகழ்வுகள் நடக்கின்றன.

கோடிலிங்கம் கோயில்

சுருளி நீர்வீழ்ச்சிப் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் சுருளிமலைச் சாரலில் தனியார் அறக்கட்டளை அமைப்பு ஒன்று "ஸ்ரீ கைலாசலிங்க பர்வதவர்த்தினி திருக்கோயில்" என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளது. இந்தக் கோயிலில் மிகப்பெரிய லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதன் முன்பு பர்வதவர்த்தினி சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைகளின் முன்பாகவும், பின்புறமும் வலது மற்றும் இடது பகுதிகளிலும் சுமார் ஆயிரத்து ஐநூறு லிங்கங்கள் சிறியதும் பெரியதுமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஒரு கோடி லிங்கம் வரை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த லிங்கம் அமைப்பிற்கு யாரும் உதவலாம் என்றும் இந்தக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் விபரங்கள் தரப்பட்டுள்ளன.பயண வசதி

தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுருளி நீர்வீழ்ச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. கம்பம் நகரில் காந்தி சிலைப் பகுதியிலிருந்து மினி பேருந்து வசதி 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உள்ளது. தேனியிலிருந்து கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களில் பயணிப்பவர்கள் உத்தமபாளையம் எனும் ஊருக்கு முன்பாகச் செல்லும் பாதையில் கோகிலாபுரம், இராயப்பன்பட்டி மற்றும் சுருளிப்பட்டி வழியாகப் பயணிக்கலாம். பயணத்தூரம் குறையும். பேருந்து வசதியை நாடுபவர்கள் கம்பம் நகருக்குச் சென்று விடுவது நல்லது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/touristplace/p2.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License