சுதந்திரப் பறவையாக...!
காலத்தைக் கடத்துங் காதலை விடுத்து
காலையில் எழுந்து கவனமாய்ப் படிக்கும்
பாலத்தைக் கட்டி பாதையை போட்டு
பயணமும் தொடங்கி பயன்பெறு கின்ற
சீலத்தை வளர்த்து சிந்தனை உளியால்
சீர்மிகு வாழ்க்கைச் சிற்பமும் செதுக்கி
ஏலத்தில் விடவே எகிறிடும் விலைபோல்
ஏற்றமும் கொண்டிடும் எண்ணம் வகுத்திடு.
சோளத்துக் காட்டில் சுந்தரங் காட்டும்
சோம்பேறி பொம்மை எதிரில் சென்று
மேளத்தைக் கொட்டி மீட்டிடு மிசைக்கு
மெல்லிசை பாடி மிதந்திடும் மகிழ்வில்
தாளத்தைப் போட்டுத் தாம்தூ மென்றால்
தகதிமி நடனம் ஆடுமென் றெண்ணும்
கோளாறை விட்டு குவலயம் செழிக்கும்
கோட்பாடு வகுக்குங் குயிலாய் கூவு.
தோழர்க ளோடு தோழியர் சேர்த்து
தொலைக்காட்சித் தொடராய்த் தொடங்கி முடியா
ஆழங்க லற்டன் றாடம் பேச்சால்
ஆபத்தை வாங்கு வதைவிட் டொழித்தே
ஊழல்கள் நிறைந்த தேசத் தழுக்கை
ஒழுங்காய்கழு வும்சவர்க் காரம் தேடும்
சூழல்கள் வகுத்து சுத்தமும் செய்ய
சுதந்திரப் பறவை யாகலாம் நாளை.
- மெய்யன் நடராஜ், தோஹா, கத்தார் .
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.