கற்பனைகள் உயிர் பெற்றால்...!
கற்பனைகள் உயிர் பெற்றால்
நற்செயல்களால் நலம் கூடும்
பொற்காலம் உண்டாகும்
ஆளும் திறமையால் நாடு
பாலாய் இனிக்கும் சுவைதான்
இயற்கைச் செல்வங்களுக்கு
இடையூறு விளையாமல்
செயற்கைக்குத் தடை விதிப்பேன்
எல்லோரும் நம்மவர் என
நல்வழிப்படுத்தி ஒழுகச்செய்வேன்
அந்நிய மோகத்தை தவிர்ப்பேன்
அன்பால் உலகை ஆளுவேன்
பசுமைப் புரட்சிக்கு வித்திடுவேன்
பண்டைய செழுமை கிடைக்க உதவிடுவேன்
நதிநீர் இணைப்புக்கு வழி செய்வேன்
நீரும் நெருப்பும் விற்பனை செய்ய
அனுமதிக்க மாட்டேன்
வறுமை ஒழிய சிறுமை அகல
பெருமையாய் வாழ பெரிதும் உதவுவேன்
எத்தனைக் காலம் இருந்திடலாயினும்
எல்லோரும் எல்லாமும் பெறவைப்பேன்
- சரஸ்வதி ராசேந்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.