இன்பம் பயக்கும்
அன்பில்லாத மக்கள் என்றும்
அழிந்தொழிந்தே போவார்
ஆடிஅடங்கும் அகந்தை மனதை
அடக்கி வாழ்ந்தால் நலமே
இரண்டகம் செய்வோர் வாழ்வு
இருண்டேபோகும் இடர் சூழும்
ஈகை செய்வோரை தடுப்போர்
ஈசன் அருள் கிட்டாதார்
உண்மைக்குத் திரையிடும் பொய்யன்
உற்ற உறவுகளை பிரிக்கும் பொல்லன்
எல்லோரும் ஒன்றென்ற எண்ணம்
என்றுமே நல்லதை செய்யும்
ஏராளமாகச் சுரண்டி சேர்த்தவன்
ஏளனத்திற் குரியவன் என்றும்
ஒழுக்கநெறி பேணாதவன்
ஊரார் பழிச்சொல்லுக்கு ஆளாவான்
ஓரினமாய் ஒத்து வாழாதவன்
ஒரு போதும் முன்னேற முடியாது
ஒளடதம் என இதனைக் கொண்டால்
அஃதே இன்பம் பயக்கும் என்றும்
- சரஸ்வதி ராசேந்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.