Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

அயோக்கியனுக்கு சித்திரகுப்தன் காட்டிய வழி


சந்திரகிரி என்னும் ஒரு அழகான ஊரியில் காலிங்கன் என்ற ஒரு அயோக்கியன் இருந்தான்.

அவனுக்கு நல்லவர்களைக் கண்டாலே பிடிக்காது. எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதே அவனது தினசரி வேலையாக இருந்தது.

மற்றவர்களை ஏமாற்றி ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தான். இதனால் பெரும் செல்வந்தனாக வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது சிறிதும் இல்லை என்பதால், நாளுக்கு நாள் அவன் மற்றவர்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.

இப்படியிருக்க ஒரு நாள் அவனுக்கு விசித்திரமான கனவு ஒன்று வந்தது.

அந்தக் கனவில் அவன் கொடுமைகள் பல அனுபவிப்பது போலவும், அவனால் அந்தக் கொடுமைகள் தாங்க இயலாமல் துடிதுடிப்பதைப் போலவும் காட்சிகள் வந்தன.

அலறியெழுந்த அவன், தான் செய்த பாவங்களால்தான் இவ்வாறு கனவு கண்டதாக எண்ணினான்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், அந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு முனிவரைச் சந்தித்து, தன்னைப் பற்றியும், தான் கண்ட கனவைப் பற்றியும் எடுத்துரைத்தான்.

இதை கேட்ட முனிவர், நீ கண்ட கனவு எதிர்காலத்தில், நீ இறந்த பின்பு நடக்கப் போவதை உணர்த்தியுள்ளது என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவன், முனிவரிடம் அதைத் தடுக்க வழிகேட்டான்.

அதற்கு அந்த முனிவர், உனது உயிர் பிரியப் போகும் காலத்தை எமன் முடிவு செய்துவிட்டான்.

சித்திரகுப்தன் உனது பாவப் புண்ணியத்தை கணக்கு பார்க்க வேண்டியதுதான் மீதமுள்ளது என்றார்.

காலிங்கன் முனிவரைப் பார்த்து, நான் தப்பிக்க வழி ஏதுமில்லையா? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சித்திரகுப்தன் உனது பாவத்தைக் குறிக்காமல் விட்டாலொழிய வேறு வழியில்லை என்றார்.

காலிங்கன், இதைக்கேட்டு மிகுந்த வருத்தத்துடன், என்ன செய்வது என அறியாமல் குழம்பிப் போய் இருக்க, அந்தச் சமயத்தில் அவனது மனைவியிடம் நடந்ததைக் கூறினான்.

இதை கேட்ட அவனது மனைவி, கவலைப்படாதீர்கள் எனக் கூறி, பின்னர் ஒரு ஆலோசனை ஒன்றையும் கூறினாள்.

அது என்னவென்றால், நீங்கள் சித்திரகுப்தனை எண்ணித் தவமிருங்கள் அப்பொழுது அவரே உங்களுக்கு உதவலாம் என்றாள்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த காலிங்கன், அருகில் இருந்த காட்டிற்குச் சென்று சித்திரகுப்தனை எண்ணித் தவமிருக்கத் தொடங்கினான்.

அவனது தவத்திற்கு மகிழ்ந்த சித்திரகுப்தன் அவனுக்குக் காட்சி கொடுத்தார்.


சித்திரகுப்தன் அவனைப் பார்த்து காலிங்கா, அதீத சக்திகள் கொண்ட இறைவனை எண்ணித் தவம் புரியாமல், எவ்விதமான அருளும் புரியக்கூடிய வல்லமை இல்லாத என்னை நோக்கித் தவமிருக்க என்ன காரணம்? எனக் கேட்டார்.

அதற்குக் காலிங்கன், நான் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கள் அறியாமல் இருக்க இயலாது. நான் மனம் திருந்தி விட்டேன். நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கு நீங்கள்தான் வழி கூற இயலும் என்றான்.

பல பாவங்கள் செய்தாலும், இறுதியாக மனம் திருந்தி, என்னை எண்ணி தவமிருந்து என்னை மகிழ்வித்த உனக்குக் கட்டாயம் உதவி செய்கிறேன்.

ஒருவர் உயிரிழந்த பிறகு வாழக்கூடிய வாழ்க்கையை என்னால் கண்டிப்பாக மாற்ற இயலும் என்று கூறி, காலிங்கனின் ஆயுள் காலத்தைப் பார்த்தார்.

அமைதியாக காலிங்கா! உனது ஆயுள் காலம் இன்னும் இருநாட்கள்தான் உள்ளது. உன்னால் அதற்குள் நீ செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய இயலாது. ஆனால், உனக்கு ஒரு வழி சொல்கிறேன். அதுபோல நடந்து கொண்டால், நீ நரகத்திற்கு செல்லாமல் தப்பிக்கலாம் என்றார்.

காலிங்கன், நீங்கள் சொல்வது எனக்கு வேத வாக்கு. நீங்கள் எது சொன்னாலும், அதைக்கேட்டு நடந்து கொள்கிறேன் என்றான்.

இந்த இரு நாட்களுக்குள் எப்படியாவது ஒரு குளத்தை வெட்டிவிட்டு, அதில் ஒரு பசு தண்ணீர் குடித்தால், அதனால் உனது புண்ணிய கணக்கில் இரண்டரை நாழிகை கிடைக்கும்.

நீ இறந்த பின்னர் எமதர்மராஜன் உன்னிடம் நீ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப முதலில் சொர்க்கம், செல்கிறாயா? அல்லது நரகம் செல்கிறாயா? எனக் கேட்பார்.

நீ அதற்கு சொர்க்கம் செல்கிறேன் எனக்கூறிச் சென்றுவிடு, அந்த இரண்டரை நாழிகைக்குள் வேறு பசுக்கள் தண்ணீர் அந்த குளத்தில் அருந்தினால் உனக்கு இன்னும் இரண்டரை நாழிகை கிடைக்கும்.

இதுபோல உனக்கு சொர்க்கத்தில் நிரந்தரமாக வாழ வழி கிடைக்கலாம் என்றார்.

இதைக்கேட்ட காலிங்கன் சித்திரகுப்தனுக்கு நன்றி தெரிவித்து, தன்னிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் செலவழித்து இருநாட்களுக்குள் குளத்தை வெட்டினான்.

தண்ணீர் பெருக்கெடுத்து குளம் முழுவதும் நிறைந்தது.

ஏதேனும் ஒரு பசுவாவது தண்ணீர் குடிக்க வருமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு பாம்பு தீண்டி காலிங்கன் இறந்து போனான்.

காலிங்கன் இவ்வளவு கஷ்டப்பட்டும் அனைத்தும் வீணானதே என எண்ணிக் கொண்டிருக்க, எமதர்மன் அவனை அழைத்து இவனை நரகத்தில் போடுங்கள் என்று சொன்னான்.

சித்திரகுப்தன் இடைமறித்து, எமதர்மரே! அங்கே பாருங்கள் ஒரு பசுவானது அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டு இருக்கிறது.

இதனால் இவனது கணக்கில் புண்ணியம் சேர்த்துள்ளது. அதனால் அவனிடம் அவனது விருப்பத்தை கேளுங்கள் என்றார்.

எமதர்மன்! வெறும் இரண்டரை நாழிகைதானே, கேட்கிறேன் என கூறி அவனிடம் இரண்டரை நாழிகை சொர்க்கம் செல்கிறாயா, அல்லது உனது பாவங்கள் முடிந்த பின்னர் சொர்க்கம் செல்கிறாயா? எனக் கேட்டார்.

காலிங்கன் மகிழ்ச்சியுடன் நான் சொர்க்கம் செல்கிறேன் எமதர்மரே என்றான்.


இரண்டரை நாழிகை பின்பு உனது வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கு சரியான தண்டனை தருகிறேன் சென்று வா எனக்கூறி சொர்க்கம் அனுப்பி வைத்தார்.

இரண்டரை நாழிகை முடிந்த பின்னர் நரகத்திற்கு அழைத்து வர, அப்பொழுது ஒரு பசு அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் அருந்த மறுபடியும் சொர்க்கம் சென்றான்.

மறுபடியும் இரண்டரை நாழிகை முடிந்த பின்னர் நரகத்திற்கு அழைத்து வர ஒரு கூட்டமாக பசுக்கள் தண்ணீர் அருந்த அவன் மறுபடியும் சொர்க்கம் சென்றான்.

இவ்வாறாக அவன் சொர்க்கத்திலேயே இருக்கும்படி நடந்துவிட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p1221.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License