1. பிரதமை - அக்னிக்கு உரிய நாள். பூஜைகள் மற்றும் மங்கல காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2. துவிதியை - பிரம்மாவுக்கு உரிய நாள். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மை தரும்.
3. திருதியை - கெளரிமாதாவுக்கு உகந்த நாள். சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.
4. சதுர்த்தி - எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்த்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5. பஞ்சமி - நாகதேவனின் நாள். விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6. சஷ்டி - முருகனுக்கான நாள். புதிய நண்பர்களைச் சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு தரும்.
7. சப்தமி - சூரியனுக்குரிய நாள். பயணம் தொடங்குதல், பயணப்படி பெறல் போன்ற நகர்தல் தொடர்பான செயல்கள் கைகூடும்.
8. அஷ்டமி - மஹாருத்ரனுக்குரிய நாள். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்புக் கலை கற்றல் ஆகியவை தொடங்கலாம்.
9. நவமி - அம்பிகையின் நாள். எதிரிகளைக் கொல்லுதல், எதிரிகளை வீழ்த்துதல்.
10. தசமி - தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீகச் செயல்கள் நன்மை தரும்.
11. ஏகாதசி - மஹாருத்ரனின் நாள். விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவைத் தியானித்தல் சிறப்பு.
12. துவாதசி - மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடைய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல்.
13. திரயோதசி - மன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்த்தல்.
14. சதுர்த்தசி - காளியின் ஆதிக்கமுடைய நாள். விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல்.
15. அமாவாசை - பித்ருகளுக்குச் செயல்கள் செய்யவும்.
16. பௌர்ணமி - அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் நலம் தரும்.