இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

யோகங்களும் அவற்றின் பலன்களும்

உ. தாமரைச்செல்வி


யோகம் என்பது வானத்தில் (ஆகாயத்தில்) ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரமாகும். இவை 27 யோகங்களாக இருக்கின்றன. இந்த 27 யோகங்ளும் கூட முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்ய, கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப் போன்றேப் பயன்படும் நான்காவது அமைப்பாகும். அவை;

1. விஷ்கம்பம் (விஷ் யோகம்)

இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றி கொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ளத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களைச் சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டி யே உணரும் தீர்க்கத்தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார்.

2. ப்ரீதி (ப்ரீ யோகம்)

இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகியோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல்பாட்டுத் திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்தான். காம இச்சை சற்று அதிகம் இருக்கும் நற்குணமுடைய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.

3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்)

இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி – யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற்கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதியாக வாழ்வார்கள். அனைவ ரையும் மதிப்பவர்கள், பக்திமான்களாக தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால்நடைச் செல்வங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.

4. செளபாக்யம் (செள யோகம்)

பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம்தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல்திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்தி மான்களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்மவான்களாக இருப்பார்கள். பெரியோர்களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை செய்யும் மனப்பான்மையும் இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்கள்.

5. சோபனம் (சோ யோகம்)

சுபயோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திருமணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவதுண்டு. இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவதுடன் “சோபனம்” எனும் உடல் உறவுக் கல்வியில் தணியாத விருப்பத்துடன், நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கைதான். கஷ்டத்தை வெறுப்பவர்கள், சுற்றம் நட்பை அதிகம் விரும்புவார்கள். செல்வாக்குடையவர்கள் எனலாம்.


6. அதிகண்டம் (அதி யோகம்)

பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதிகண் டம். எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம், தொல்லை, கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்குத் தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரைத் துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களாக இருப்பதுண்டு. பேராசையும், முன் கோபமும், முரட்டுத் தனமும், அலட்சியமும், சோம்பலும் இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக்கானவர்களாக இருப்பார்கள்.

7. சுகர்மம் (சுக யோகம்)

இது நல்லயோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர்கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வ காரியங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார்கள்.

8. திருதி (திரு யோகம்)

இது அசுப யோகம்தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை உடை யவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் உடையவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடு இருப்பதுண்டு.

9. சூலம் (சூல யோகம்)

இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெரிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட் டார்கள். எவருடனும் ஒத்துப் போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதுடன் வீண் வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு. உடல் உறவு சுகத்தில் மிக அதிகமான ஆசை இருக்கும். கண்டபடி அளவற்ற காமசுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப்படுவதுண்டு.

10. கண்டம் (கண் யோகம்)

இதுவும் அசுபமான யோகம்தான். கண்டம் என்ற பெயரைப் போல இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண்டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல எண்ணங்களும் இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. மற்றவர்களுக்குத் தீமைகள் செய்வார்கள். வஞ்சக எண்ணம் இருக்கும். எவரையும் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவார்கள். கர்வம் அலட்சியம் இருக்கும்.

11. விருத்தி (விரு யோகம்)

செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்ட மும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வபக்தியும், நற்பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல எண்ணம் செயல்பாடுடை யவர்கள் எனலாம். இது சுபமான யோகமாகும்.


12. துருவம் (துரு யோகம்)

இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன், எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர்போலப் பட்டும் படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழி தீர்த்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது அசுபமான யோகமாகும். சிலர் இதையும் சுபயோகம் என்று கூறுவதுண்டு. எனினும் சுப காரியங்களுக்கு விலக்களிக்க வேண்டிய யோகம் தான்.

13. வ்யாகதம் (வ்யா யோகம்)

இதுவும் அசுபமான யோகம்தான். முன்கோபமும், முரட்டுத்தனமும் உடைய இவர்கள் சமுகத்தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள், சூது, வாது, கபடம் உள்ளவர்களே. மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்வார்கள்.

14. ஹர்ஷணம் (ஹர் யோகம்)

இது சுபமான யோகமாகும். செல்வாக்கும், சொல்வாக்கும் உடை யவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத்தரிசிகளாக இருப்பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தில் சற்று கூடுதலான அதிகமான ஈடுபாடுடையவர்கள். தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்களே எனலாம்.

15. வஜ்ரம் (வஜ் யோகம்)

இது சுபமான யோகமாகும். இதைச் சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால், இது சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். உதவும் மனப்பான்மையும் உண்டு. நல்ல தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள்தான் என்றாலும் தனக்குத் தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்துக் கொள்வார்கள்.

16. சித்தி (சித் யோகம்)

சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாசனா சக்தியுடையவர்கள். தியானம் – யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடை யவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற்கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையுடையவர்கள் எனலாம்.

17. வியதீபாதம் (விய யோகம்)

இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும், கஷ்டங்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல்படாமல் அவசர முடிவால் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதால் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள். செயல்பாட்டு உறுதியும், திறனும் இருப்பதில்லை.

18. வரீயான் (வரீ யோகம்)

இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப்பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக்கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல்லெண்ணம், நல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்.

19. பரிகம் (பரி யோகம்)

இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கெனத் தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு, அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும் முயற்சியுடையவர்கள். வெற்றி காணும் வரை ஓயமாட்டார்கள். விளையாட்டுகளில், பொழுதுபோக்குகளில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.


20. சிவம் (சிவ யோகம்)

இதுவும் சுபமான யோகம்தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுபவர்களாகவும், தியான ம், யோகம், பக்தி, ஞானமார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாகவும் இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களைச் சந்திப்பதில் அதிக ஆர்வமுடையவர்கள். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்களுக்குக் கிடைக்கும். தெய்வக்காரியங்கள், திருப்பணிகள், தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும், நல்ல செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.

21. சித்தம் (சித் யோகம்)

இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்குமே அஞ்சமாட்டார்கள். உறுதியான சித்தமுடையவர்கள். எடுக்கும் முடிவுகளைச் சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திரப் புலமை, பரிச்சயமுடையவர்கள். நல்ல பக்தியும் இருக்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

22. சாத்தியம் (சாத் யோகம்)

இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடுவார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம இச்சை உடையவர்கள் என்பதுடன் காமக்கலையில் வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் கெட்டிக்காரர்கள். இந்தப் பேச்சினாலேயே மற்றவர்களைக் கவர்ந்து விடுவார்கள். சங்கீத ஞானமும் இருப்பதுண்டு.

23. சுபம் (சுப யோகம்)

பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்குச் சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரியங்கள், திருப்பணிகள், பொதுச்சேவையிலும் நல்ல நாட்டமிருக்கும். அனைத்துத் தரப்பினரிடமும், சுமுகமான உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.

24. சுப்பிரம் (சுப் யோகம்)

இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்துக்குமே இவர்களுக்குக் கடவுள்தான். தான் எந்தச் சாதனை செய்தாலும் தன்னைப் பற்றிப் பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கேச் சமர்ப்பணம் செய்வார்கள். மன உறுதியும், வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.

25. பிராம்மியம் (பிரா யோகம்)

இதுவும் சுபமான யோகம்தான். தியானம், யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர்கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சியுடையவர்கள். ஞானிகள், யோகிகள், மகான்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். விவேகத்துடன் செயல்படுவதுடன் தியாக உணர்வும், தரும சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வதுமுண்டு. உடல் நலத்தை விரும்புபவர்களாக இருப்பதால் ஹோமம், யாகம், சமாராதனை, அன்னதானம் போன்றவைகளைச் செய்யக் கூடியவர்கள் எனலாம்.


26. ஐந்திரம் (ஐந் யோகம்)

இதுவும் சுபமான யோகம்தான். இதைச் சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வருவதுண்டு. நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். முன்கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும், வேதஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வ பக்தியுடையவர்கள். தெய்வ காரியங்களைச் செய்வார்கள்.

27. வைதிருதி (வை யோகம்)

இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுப்பவர்கள். நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள். நேர்மை இருக்காது. கடவுள் பக்தியைக்கூட வியாபாரமாக்கிக் காசு பண்ணி விடுவார்கள். ஆதாயம் இல்லாமல் எதையுமேச் செய்யமாட்டார்கள். கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள், தீய பழக்கங்கள் இருக்கும்.

குறிப்பு:

மேலேயிருக்கும் 27 யோகங்களின் பொதுவான பலன்தான். ஜாதக அமைப்புப்படி, கிரகங்களின் நிலைகளின்படி, குணாதிசியங்கள் மாறக்கூடும் என்ற போதிலும் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண்டு அவர்களிடம் இருக்கவேச் செய்யும். நட்சத்திரங்களின், திதிகளினபடி, சில குணாதிசயங்கள் மாறுபாடு இருக்கலாம்.

முகநூல் பக்கமொன்றிலிருந்து



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p126.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License