ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ இருந்தால் அவருக்குப் பிரம்மஹத்தி தோசம் இருப்பதாகப் பொருள். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும்.
பிரம்மஹத்தி தோசம் எப்படி ஏற்படும்?
ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரைக் கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்தப் பிரம்மஹத்தி தோசம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்களாலும் பிரம்மஹத்தி தோசம் ஏற்படுவதுண்டு
1. பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குக் கொடுத்து, அவளுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அவளைத் திருமணம் செய்யாமல் இருத்தல்.
2. பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய சம்பளம் தராமல் ஏமாற்றுவது
3. குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
4. குருவின் கொள்கை பிடிக்காமல் தானேக் குருவாக மாறிக் கொள்வது
5. வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்று விடுவது
6 . சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையைத் திருடுதல் போன்ற தவறுகளைச் செய்திருத்தல்
7. உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும், அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆண்/பெண் இருவருமே)
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் என்ன செய்யும்?
1. வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
2. தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
3. மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
4. தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
5. திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
6. குழந்தைப்பேறு இல்லாமல் போகும் அல்லது தாமதம்