ஒரு நாளுக்கான 24 மணி நேரத்தை மூன்று மணி நேரங்கள் வீதம் எட்டுக் காலங்களாகப் பிரித்திருக்கின்றனர். அவை;
1. விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை - பிரம்ம முகூர்த்தம்.
2. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை - தேவர்கள் காலம்.
3. முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை - ரிஷிகளின் காலம்.
4. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை - பிதுர்க்களின் காலம்.
5. பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை - சந்தியா காலம்.
6. முன் இரவு 6 மணி முதல் 9 வரை - பூத காலம்.
7. நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை - பிரேத காலம்.
8. பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை - ராக்ஷச காலம்
* இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் திதி, நட்சத்திரம் சரியில்லா விட்டாலும், அனைத்துச் சுபகாரியங்களும் செய்யலாம்.
* உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நட்சத்திரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.
* ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை, திதி, நட்சத்திரம், வேளை அடுத்தபடியாகவும் தேர்ந்து செய்ய வேண்டும்.
* பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும், நட்சத்திரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
* சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும், ஜெபம், தவம் போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.
* நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது, நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் தொடங்கவோ, முடிக்கவோக் கூடாது.