ஆட்சி வீட்டிற்கு ஏழாம் வீடு பகை வீடு. கோள்கள் யாவும் தத்தமக்கு என்று இரண்டு வீடுகளைப் பெற்றுள்ளன. சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் மட்டும் தமக்கென ஒரே வீட்டினைப் பெற்றுள்ளன. இவற்றிற்கு நேர் எதிரான ஏழாம் வீடு 180 பாகையில் உள்ள வீடு அதன் எதிர் வீடு பகை வீடாகும். உச்ச வீட்டிற்கு ஏழாம் வீடு நீச வீடு. கோள்கள் யாவும் தமக்கென உச்சப்பாகை பெற்று விளங்குகின்றன. அதே போல் நேர் எதிரான ஏழாம் வீடு 180 பாகையில் உள்ள வீடு அதன் எதிர் நீசமாகும் வீடாகும். உச்சப்பாகையில் உள்ள வீட்டில் பூரண பலன் காணப்பெறும். நீசப்பாகையில் பலமிழந்து காணப்பெறும்.
கேந்திரம்
பொதுவாக சர வீடுகள் - மேடம், கடகம், துலாம், மகரம் ஆகியன கேந்திர வீடுகள். அவரவர் பிறந்த சாதகப்படி இலக்னத்திற்கு 1,4,7,10 ஆம் வீடுகள். இலக்ன கேந்திரம், சதுர்த்த கேந்திரம் 90 பாகை - 120 பாகை, சப்தம கேந்திரம் 180 பாகை - 210 பாகை, தசம கேந்திரம் 270 பாகை - 300 பாகை ஆக இவை முறையே 1, 4, 7, 10 ஆகும். கேந்திரங்களில் இருக்கும் கோள்களுக்கு வலிமை மிக அதிகம். சுபராக, அசுபராக யாராக இருப்பினும் அவரவர் இருக்கும் வீடு பொறுத்துப் பலனைத் தருவார்கள்.
திரிகோணம்
பொதுவாக இலக்னத்திற்கு 1, 5, 9 ஆம் வீடுகள் மேடம், சிம்மம், தனுசு ஆகியன திரிகோண வீடுகள். அவரவர் பிறந்த சாதகப்படி இலக்னத்திற்கு 1,5,9 ஆம் வீடுகள். 120 - 150 பாகை, 240 பாகை - 270 பாகை இதற்குள்ளாக இம்மூலத்திரிகோணம் அமையும். இந்தத் திரிகோணங்களில் காணப்படும் கோள்களுக்கு வலிமை அதிகமாகும்.
பணபரம்
இலக்னத்திற்கு 2, 5, 8, 11 ஆம் வீடுகள். கோள்களுக்கு வலிமை குறைவு.
ஆபோக்லீபம்
இலக்னத்திற்கு 3, 6, 9, 12 ஆம் வீடுகள்.
உபஜயம்
இலக்னத்திற்கு வெற்றி தரும் வீடுகள்.
சுக காம வீடுகள் - 4,7.
பதவி, தொழில் தரும் வீடு - 1, 10.
கணக்கீடுகள்
பொதுவாக சூரிய உதய நேரம் 6.00 னைக் கணக்கினில் கொண்டு அனைத்தும் கணக்கிடப் பெற்றுள்ளது.
ஐ.எஸ்.டி
இதை இந்தியப் பொது நேரம் என்பர். நமது கடிகார மணியே இந்தியப் பொது நேரமாகும்.
சுதேச மணி
எல். எம். டி - டில்லியில் உள்ளவர்களும், சென்னையில், கன்னியாகுமரியில் அல்லது இந்தியாவில், எந்தப் பகுதியில், இருப்பவர்களும் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் மூலம் ஒரே நேரத்தைக் கடிகார மணியாகக் கடைபிடிக்கின்றனர். இதனால் இலக்கினம் முதலியனவற்றைக் கணிக்கும் பொழுது எவ்வித வேறுபாடும் இருக்காது. எனவே பலனிலும் வேறுபாடு காணவியலாது. எனவே கிரினீச் நேரத்திற்கு தகுந்த மாறுதல்கள் செய்து தனது ஊருக்குச் சரியான நேரத்தைக் கொண்டு வருவதே சுதேச மணியாகும்.
நட்சத்திர ஹோராமணி
எஸ்.ஆர்.டி - இதை சைடூரியல் டைம் என்பர். இது இலக்னத்தைக் கணிக்க உதவும்.
இராகு காலம் அறிதல்
திருவிழா சமயத்தினில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?
இதனை நினைவினில் கொண்டு பின்வரும் அமைப்பு முறையினில் நினைவும், மனனமும் செய்து கொள்ள வேண்டும். அனைத்தும் பொது சூரிய உதய நேரம் 6 ஐக் கொண்டே கணக்கிடப் பெற்றுள்ளது. நாம் அன்றாட சூரிய உதய நிகழ்வின் கணக்கின் படி அவற்றினை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணம், இன்று சூரிய உதயம் 6.05 எனில் திங்கள் இராகு காலம் 7.35 முதல் 9.05 வரை என இது போல் அனைத்தையும் கணக்கிட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
இராகு காலம்
திங்கள் - காலை 7.30 - 9.00 மணி
சனி - காலை 9.00 - 10.30 மணி
வெள்ளி - 10.30 - 12.00 மணி
புதன் - மதியம் 12.00 -1.30 மணி
வியாழன் - 1.30 - 3.00 மணி
செவ்வாய் - 3.00 - 4.30 மணி
ஞாயிறு - 4.30 - 6.00 மணி
குளிகன் அறிதல் - மாந்தி (சனிக்கோளின் உபக்கோள்)
சனி - காலை 6.00 - 7.30 மணி
வெள்ளி - 7.30 - 9.00 மணி
வியாழன் - 9.00 - 10.30 மணி
புதன் - 10.30 - 12.00 மணி
செவ்வாய் - மதியம்12.00 - 1.30 மணி
திங்கள் - 1.30 - 3.00 மணி
ஞாயிறு - 3.00 - 4.30 மணி
எமகண்டம் அறிதல்
வியாழன் - காலை 6.00 - 7.30 மணி
புதன் - 7.30 - 9.00 மணி
செவ்வாய் - 9.00 - 10.30 மணி
திங்கள் - 10.30 - 12.00 மணி
ஞாயிறு - மதியம்12.00 - 1.30 மணி
சனி - 1.30 - 3.00 மணி
வெள்ளி - 3.00 - 4.30 மணி