ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்குப் போனான்.
அந்தக் கடைக்காரர், “பையன் அழகா இருக்கானே...” என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டைக் காட்டி “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க” என்றார்.
ஆனால் அந்தப் பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.
கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.
அதைப் பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.
அப்போதும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
பிறகு அந்தக் கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான்.
வீட்டிற்குப் போனவுடன் அவன் அம்மா, “ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை?” என்று கேட்டார்.
“அம்மா என் கையைப் பாருங்கள், எவ்வளவு சின்னதா இருக்குது. நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்குக் கொஞ்சமாகத்தான் கிடைத்திருக்கும். இப்ப பாருங்க, அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாச் சாக்லேட் கிடைச்சிருக்கு...” என்றான்.
எதையுமே நாம் தேடிப்போனால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவே நம்மைத் தேடி வந்தா அதிகமாகக் கிடைக்கும்