அதிர்ஷ்டம்
குற்றங் குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக் கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும்.
- கதே
அதிர்ஷ்ட தேவியின் குன்றின் மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு? சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே.
- நெளல்ஸ்
துர் அதிர்ஷ்டம் சிறியோரைப் புறங்கண்டுவிடும். ஆனால் பெரியோர் அதை வென்று விடுவர்.
- வாஷிங்க்டன் இர்விங்
எப்பொழுது நாம் 'அதிர்ஷ்டம்' எனும் தேவதையை அதிகமாக விரும்புகின்றோமோ, அப்பொழுது அவள் நம்மை அதிகமாக அதட்டிப் பார்க்கின்றாள்.
- ஷேக்ஸ்பியர்
'வினைப்பயன்' என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும்.
- மில்
அதிர்ஷ்டம் அடையும் வரை என்னை அறிவிலி என்று அழையற்க.
- சேக்ஸ்பியர்
பலவீனர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பல முடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர்.
- எமர்ஸன்
அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்ப வேலை.
- பப்ளியஸ் ஸைரஸ்
அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.
- பேக்கன்
அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவ மாட்டார்கள்.
- ட்ரைடன்
கெட்டக் காலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர்.
- கார்லைல்
அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பதுமுண்டு.
- ஜார்ஜ் எலியட்
அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு.
- பேக்கன்
துர்அதிர்ஷ்டத்தைத் தாங்குவதை விட நல்ல அதிர்ஷ்டத்தைத் தாங்கவே அதிக ஆற்றல் தேவை.
- ரோஷிவக்கல்டு
அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.
- கார்லைல்
அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு.
- சேக்ஸ்பியர்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.