ஒற்றுமை

ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.
- இந்தியா

நானும் என் சகோதரனும் எங்கள் அத்தானுக்குப் பகையானாலும், அந்நியன் வந்தால், நானும் அத்தானும் அவனுக்குப் பகையாயிருப்போம்.
- அரேபியா

வாதியும் எதிரியும் ஒரு படகிலே சென்றால், சாட்சிகள் நீந்தித்தான் செல்ல வேண்டும்.
- கீழை நாடுகள்

அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும்.
- பாரசீகம்

ஒரு நகரத்திற்கு எதிராக மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்தால், அதை அழித்து விடுவார்கள்.
- அரேபியா

மூன்று பிரிகளைக் கொண்ட சரட்டை விரைவில் அறுக்க முடியாது.
- பழைய ஏற்பாடு

தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும்.
- இங்கிலாந்து

ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.
- இங்கிலாந்து

பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும்.
- இங்கிலாந்து

ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒவ்வொருவரும்.
- டூமாஸ்

ஒற்றுமைப்பட்டால் வலிமை அதிகம்.
- லத்தீன்

அடக்கமாக அடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒற்றுமையே சிறந்த வலிமை.
- லத்தீன்

கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான்.
- உருசியா

எவன் என்னோடு இருக்கவில்லையோ அவன் எனக்கு எதிரானவன்.
- புதிய ஏற்பாடு

கட்டாகவுள்ள கழிகளை ஒடிக்க முடியாது.
- ஆப்பிரிகா
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.