- பிரான்சுவா டி லா ரோச்ஃபோகால்ட்

மரியாதை எல்லா மனிதர்களின் அன்பையும் கவரக்கூடிய ஆற்றலுள்ளது: அதில் சொற்பமாயில்லாமல், அதிகமாயிருப்பதே நல்லது.
- பிஷப் ஹார்ன்

மரியாதையாகப் பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்.
- செர்வாண்டிஸ்

உன்னை ஒருவர் வணங்கினால், அவனை விட அதிகமாகப் பணிவோடு நீயும் வணங்கு அல்லது அதே அளவாவது திருப்பிச் செய். ஏனெனில், ஆண்டவன் எல்லா விஷயங்களையும் கவனிக்கிறான்.
- குர்ஆன்

சிறு மரியாதைகள் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. பெரிய மரியாதைகள் அதை மிகவும் சிறப்படையச் செய்கின்றன.
- போவீ

மரியாதை காட்டுதல் முதன்மையாக முக்கியமுள்ள ஒரு கலை. உடலின் அழகும் எழிலும் பார்த்தவுடன எப்படி ஒருவரைக் கவர்ந்து, பிறகு அந்தரங்கத் தோழமை கொள்ள உதவுகின்றனவோ, அதே போன்றது மரியாதையும்.
- மாண்டெயின்

நம்முடைய நடத்தை நம்மினும் உயர்ந்தோர் தாழ்ந்தோர். நமக்குச் சமமானவர் ஆகிய மூன்று வகையான மக்களிடத்திலும் பொருத்தமாக இருக்கும்படி அமைய வேண்டும் இது நற்பயிற்சியில் முக்கியமான ஒரு விஷயம்.
- ஸ்விஃப்ட்

நற்பயிற்சியில்லாத அறிஞன் தற்பெருமைக்காரனாக இருப்பான். தத்துவஞானி குறை சொல்லிக் கொண்டேயிருப்பான். போர் வீரன் வெறும் முரடனாயிருப்பான். அது இல்லாத ஒவ்வொருவனும் வெறுக்கததககவனாயிருப்பான்.
- செஸ்டர்ஃபீல்டு

மரியாதைக்கு விலையில்லை. ஆனால், அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகின்றது.
- மாண்டேகு சீமாட்டி

நல்ல பயிற்சியுள்ள மனிதன் எப்பொழுதும் பழகுவதற்கு இனியன்.
- மாண்டெயின்

நடை, உடை, பாவனைகள், சட்டங்களை விட வல்லமை உள்ளவை.
- ஏ. கார்லைல்

அமைதி ஆத்திரமோ ஆவேசமோ இல்லாமை ஆகிய இவை நேர்த்தியான பண்புகளைக் காட்டும்; கனவான் ஓசையுண்டாக்க மாட்டான். சீமாட்டி சாந்தமாயிருப்பாள்.
- எமர்சன்

ஒவ்வொருவருடைய உடலுக்கும், புத்திக்கும் தக்கபடி ஒரு நடத்தை அமைந்திருக்கும். நாம் மற்றவருடைய நடத்தையைப் பார்த்து நடக்கத் தொடங்கினல், அது போய்விடும்.
- ரூஸோ
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.