இறைவன் வருவாரா...?

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.
- பைபிள்

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல்.
- டெஸ்கார்டஸ்

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
- புத்தர்

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல. கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
- மாவீரன் நெப்போலியன்

நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
- மிக்கேல் லேர்மொண்டஸ்

ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. ஆனால், நீ..?
- ரஸ்கின்

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
- எட்மன்ட் பார்க்

வ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
- சுவாமி விவேகாந்தர்

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
- அண்ணல் காந்தி

நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது. மரணம் வந்த பிறகு நீ இருக்கப் போவது கிடையாது.
- சாக்ரடீஸ்

இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
- கன்பூசியஸ்

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
- அன்னை தெரசா

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
- வோயாஸ்

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
- கவிஞர் ஹோமர்

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
- கவிஞர் கண்ணதாசன்

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
- ஹென்றி டேவிட் தேரோ

அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகிறார்கள்.
- கன்பூசியஸ்

உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
- டாக்டஸ்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.