வாழ்க்கை பழமொழிகள்

சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல் - இது தான் வாழ்க்கை.
- இந்தியா

உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.
- சீனா

வாழ்க்கை இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம்.
- அரேபியா

வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது கண்ணீர் வரும்.
- பிரான்ஸ்

மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான்.
- ஜெர்மனி

நாம் அழுது கொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்ற மடைந்து இறக்கிறோம்.
- இங்கிலாந்து

வாழ்க்கை வேண்டுமானால், நாட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
- பல்கேரியா

பிறக்கும் பொழுது அழுது கொண்டு வந்தோம், போகும் பொழுதாவது சிரித்துக் கொண்டு செல்லும்படி வாழ வேண்டும்.
- எஸ்டோனியா

வாழ்க்கை என்பது அடித்தல், அல்லது அடிபடுதல்.
- ரஷ்யா

மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது.
- ருமேனியா

சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், பழக்கம் அதை இன்பமாக்கும்.
- கிரீஸ்

நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும்.
- இத்தாலி

நாம் வாழ்க்கையைச் சிறு துண்டுகளாக்கி வீணாக்குகிறோம்.
- லத்தீன்

மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.
- ஸ்பெயின்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.