தாயும் தந்தையும்

தாயில்லாத வீடு வீடாகுமா?
- இங்கிலாந்து

குழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள்.
- இங்கிலாந்து

தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்?
-இந்தியா

பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும்.
- இந்தியா

அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது.
- ஜெர்மனி

தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை அவனுடைய மௌனத்திற்கே அஞ்சுகிறான்.
- சீனா

ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம், பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது.
- பழைய ஏற்பாடு

ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.
- இங்கிலாந்து

தந்தை தோட்டத்திற்குப் போனால், மகன் உழுவதற்குப் போவான்.
- இங்கிலாந்து

தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது.
- ரஷ்யா

குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்களை நேசிப்பவன்.
- பிரான்ஸ்

தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான்.
- சீனா

தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான்.
- சீனா

தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி.
- பல்கேரியா

தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம்.
- ஆப்பிரிகா

தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை.
- எஸ்டோனியா

செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய்.
- இந்தியா

தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும்.
- ஸ்காட்லந்து

எந்தத் தாயாரும் தந்தையாரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை.
- ஸ்பெயின்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.