முன் யோசனை குறித்த உலகப் பழமொழிகள்

ஆபத்துகளையும் அபாயங்களையும் பற்றி முன்கூட்டி ஆராய்ந்து கொண்டேயிருப்பவன் ஒருகாலும் கடல் பயணம் செல்லமாட்டான்.
- இங்கிலாந்து

கிழிப்பது எளிது, தைப்பது கஷ்டம்.
- இந்தியா

கோபுரத்தைத் திருடுகிறவன் அதை வைக்க இடம் தயாரிக்க வேண்டும்.
- துருக்கி

மந்தாரமாயிருக்கும் பொழுதே குடை எடுத்துச் செல்லவும்: பசி இல்லாதிருக்கும் பொழுதே உணவை எடுத்துச் செல்லவும்.
- சீனா

நாயோடு தாராளமாக நெருங்கிப் பழகலாம், ஆனல் கையிலுள்ள கழியை நழுவ விடாதே.
- அரேபியா

வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்து கொண்டு உள்ளே நுழை.
- அரேபியா

சம்பளமில்லாத மாதத்திற்கு நாட்கணக்குப் பார்க்க வேண்டாம்.
- அரேபியா

குழந்தையை ஒரு வேலைக்கு அனுப்பினால், நீயும் போக வேண்டியிருக்கும்.
- ஆரீமீனியா

ஒரு கயிறு பிரிந்திருந்தால், அது பல கயிறுகளைப் பிரியச் செய்யும்.
- யூதர்

ஒருநாள் பயணத்திற்கு இருநாள் உணவும், கோடைப் பயணத்தில் மாரிக் காலத்து உடைகளையும் எடுத்துக்கொள்.
- மங்கோலியா

சர்க்கரையாலே சாகக் கூடியவனுக்கு நீ விஷம் கொடுப்பானேன்?
- கீழ் நாடுகள்

ஓநாயுடன் நீ விருந்துண்ணும் போது, உன் நாயும் பக்கத்திலிருக்கட்டும்.
- கீழ் நாடுகள்

தண்ணீர் நாடி வரை வந்த பிறகுதான் நாய் நீந்தத் தொடங்கும்.
- கீழ் நாடுகள்

ஓடினால் மட்டும் போதாது; உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும்.
- பிரான்ஸ்

எல்லா மடுக்களுக்கும் பாதுகாப்புச் சுவர் இராது.
- ஜெர்மனி

துடைக்க முடியாதவைகளைத் தட்ட வேண்டும்.
- ஜெர்மனி

சிறு ஆணிகளுக்குப் பெரிய சம்மட்டிகள் பயன்படாது.
- ஜெர்மனி

கம்பளம் விற்றுக் கடனைக் கொடுக்கலாம் என்றால், கம்பளி ஆட்டை விற்கக் கூடாது.
- ஜெர்மனி

முதுமையில் ஊன்றிக் கொள்ள இளமையிலேயே ஒருவன் ஒரு கழி தயாரித்துக் கொள்ள வேண்டும்.
- ஜெர்மனி

பருவைக் கிள்ளிப் பெரிய புண்ணாக்க வேண்டாம்.
- அமெரிக்கா

பூனைகளை வளர்க்காவிட்டால், எலிகளை வளர்ப்பதாகும்.
- வேல்ஸ்

அடுத்த வீட்டு வாசலில் குரங்காட்டி வந்துவிட்டால், நீயும் காசு எடுத்து வைத்துக்கொள்.
- செர்பியா
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.