
தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.
- எமர்சன்

சூரியனாகப் பிரகாசிக்க சந்தர்ப்பம் இருக்கும் போது, ஏன் மெழுகுவர்த்தியைப் போல் வெளிச்சம் தர வேண்டும்.
- நெப்போலியன் ஹில்

நீ உன் வலது காலை முன்னே எடுத்து வை; உன் இடது கால் தானாகவே முன்னால் வந்துவிடும்.
- நெப்போலியன்

நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அநாதை விடுதியில் இருந்த போதும் உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்.
- சார்லி சாப்ளின்

எக்கணமும் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும். தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே நிலையான புகழை ஈட்ட முடியும்.
- ஹெரால்டு

எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
- மில்டன்

நடக்கும் ஒவ்வொன்றிலும் வாய்ப்புகளை கண்டுபிடிக்கிறான் ஊக்கமுள்ளவன். அதற்கான சக்தியையும் ஊக்கமான உள்ளமே வழங்கிவிடுவதால் வெற்றியும் பெறுகிறான்.
- ஹென்றி ஹாகின்ஸ்

மனிதர்களை உருவாக்குவது உதவிகள் அல்ல; தடைகள் தாம். வசதிகள் அல்ல; சிரமங்கள் தாம்.
- வில்லியம் மேத்யூஸ்

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும்போது ஒன்றை மட்டும் மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.
- கிளப்டைம்

அறிவு கொஞ்சமாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
- எடிசன்

ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம் ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று சமாதானம் அடையும் மனதில் இழப்பு இலகுவாகி நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.
- புத்தர்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.