நாயிடன் கடன் வாங்கினால்....!

கண்ணிர் விடுவதால், கடன் அடையாது.
- ஜப்பான்

அதிகமாகக் கடன் வாங்குபவன் அதிகமாக இழப்பவன்.
- பிரான்ஸ்

கடன் அடைப்பவன் தன் முதலைப் பெருக்குகிறான்.
- ஜெர்மனி

கடன்களும் பாவங்களும் நாம் நினைப்பதை விட அதிகமாகவே இருக்கும்.
- இங்கிலாந்து

கடன் கேட்க வருபவனை யாரும் வரவேற்க மாட்டார்.
- அயர்லந்து

கடன்களோடு வாழ்வதை விட, இரவில் சாப்பிடாமல் படுப்பது நலம்.
- செக்

கடன் பலரை மேலே தூக்கிவிடும்; பலரைக் கீழே அமுக்கியும் விடும்.
- டென்மார்க்

கடனைத் திருப்பிக் கொடுத்தவன் மறுபடி வாங்க முடியும்.
- ஹாலநது

கடனில்லாதவனே பணக்காரன்.
- ஹங்கேரி

கொடுக்க முடியாத கடன்காரரிடம் கிடைத்தது ஆதாயம்.
- லத்தீன்

நீ கடன் கொடுக்கும் போது அவர்கள் உன்னை வணங்கினர்கள்: வசூலிக்கும் போது நீ அவர்களை வணங்க வேண்டும்.
- ரசியா

உரிமையாளருக்குக் கடன்கள் ஏறிவிட்டால், வேலைக்காரர்கள் திருடர்களாவார்கள்.
- ஸ்பெயின்

நாயிடம் கடன் பட்டிருந்தால், அதையும் "ஐயா என்று அழைக்க வேண்டும்.
- ஆப்பிரிக்கா

கடன்காரர்களை விடக் கடன் கொடுத்தவர்களுக்கு நினைவு அதிகம்.
- ஸ்பெயின்

கடனுக்கு விற்பவனிடம் வியாபாரம் பெருகும்; ஆனால் பணம் சுருங்கும்.
- ஜெர்மனி

கடனாக ஆயிரத்திற்கு விற்பதைக் காட்டினும், ரொக்கமாக எண்ணுாறு பெறுவது மேல்.
- சீனா

ஏழையின் கடன் ஊருக்கெல்லாம் தெரியும்.
- இங்கிலாந்து

கடன் வாங்குதல் வறுமையின் முதற் குழந்தை.
- அரேபியா
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.