காய்... காய்... காய்...
பீர்க்கங்காய் பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
பிளவுகள் நிறைந்த நெஞ்சம் கொண்டவர்
பீர்க்கங்காய் பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
சுண்டக்காய் சுண்டக்காய் சுண்டக்காய்
சுகத்திற்காகப் பிறரைக் கெடுப்பவர்
சுண்டக்காய் சுண்டக்காய் சுண்டக்காய்
வெண்டக்காய் வெண்டக்காய் வெண்டக்காய்
வேலையைச் செய்வதில் வழவழப்பானவர்
வெண்டக்காய் வெண்டக்காய் வெண்டக்காய்
பறங்கிக்காய் பறங்கிக்காய் பறங்கிக்காய்
பானை வயிற்றைக் கொண்டவர்
பறங்கிக்காய் பறங்கிக்காய் பறங்கிக்காய்
பாகற்காய் பாகற்காய் பாகற்காய்
பைந்தமிழ் பேசாப் பிறமொழிப் பேச்சு
பாகற்காய் பாகற்காய் பாகற்காய்!
- கவிஞர். செல்ல. கணபதி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.