தமிழ்க் கடவுள் முருகன்
முருகன் முருகன் முருகன்
முருகன் பெயரே அழகன்!
உருகும் பாடல் சொல்லாய்
உள்ளவன் அவனே முருகன்!
அவ்வைப் பாட்டி சொன்ன
அழகுப் பாட்டே முருகன்!
எவ்வழி செல்லும் தமிழோ
அவ்வழி செல்லும் முருகன்!
தமிழர் கடவுள் முருகன்
தமிழின் கடவுள் முருகன்
தமிழ்போல் இனிக்கும் முருகன்
தமிழாய் இருக்கும் முருகன்!
குரலின் இனிமை முருகன்
குரலெனில் தமிழ்தான் குரலே
குரலின் ஒலிகள் முருகன்
குரலைக் கேட்டதும் அருள்வான்!
பாட்டுப் பாடிடும் பலபேர்
பாடிப் போற்றும் முருகன்
பாட்டாய் இருக்கும் முருகன்
பாடப்பாட வருவான்!
முருகா முருகா முருகா
முருகா எனும் சொல் அழகா!
முருகா என்கிற சிறுவன்
மொழிதான் தமிழா தமிழா!
- கவிஞர். செல்ல. கணபதி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.