Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 13
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள்

உ. தாமரைச்செல்வி


விக்கிப்பீடியா எனும் அமைப்பு ஆங்கிலம் உட்பட 267 மொழிகளில் கலைக்களஞ்சியம் எனும் பெயரில் பல தலைப்பிலான கட்டுரைகளைத் தொகுத்து வருகிறது. இந்த விக்கிபீடியாவில் தமிழ் மொழியும் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவில் (www.ta.wikipedia.org) தமிழில் எந்த தலைப்பிலும் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை அளிக்கலாம். இந்தக் கட்டுரைகள் உடனுக்குடன் குறிப்பிட்ட தலைப்புகளில் தனிப்பக்கமாக இடம் பெற்றுவிடுகிறது. இந்தக் கட்டுரையை வேறு யாரும் விரிவுபடுத்தவோ மாற்றங்கள் செய்யவோ முடியும். கட்டுரையில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் அப்படியே இடம் பெற்று விடுகின்றன. இந்த தமிழ் விக்கிபீடியாவில் நம் கட்டுரைகளைப் படைக்க என்ன செய்ய வேண்டும்?

பயனர் கணக்கு தொடக்கம்

தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் முதற்பக்கத்தில் நுழைந்தவுடன் வலதுபுறம் மேல் பகுதியில் புகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம் என்ற பகுதியைத் தேர்வு செய்து அதைச் சொடுக்க வெண்டும். இப்போது விக்கிப்பீடியாவின் புதுப்பயனருக்கான விண்ணப்பப் படிவம் தோன்றும். அந்தப் படிவத்தில் பயனர் பெயர், கடவுச்சொல் போன்றவைகளைத் தேர்வு செய்து பூர்த்தி செய்வதுடன் மின்னஞ்சல் முகவரிக்கான இடத்தில் நம் சரியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட இந்தப் படிவத்தை நாம் ஒப்புவித்த பின்பு நம் மின்னஞ்சல் முகவரிக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஒரு கடிதம் கிடைக்கும். இந்தக் கடிதத்தில் பயனர் பெயர், கடவுச்சொல் போன்றவைகள் தெரிவிக்கப்படுவதுடன் சரியான மின்னஞ்சல் முகவரிதானா என்பது சரிபார்க்கப் பட்டிருப்பதுடன் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இணைப்பில் சொடுக்கினால் நமக்கான புதுப்பயனர் பக்கம் தொடங்கப்பட்டுவிடும். அதன் பிறகு தமிழ் விக்கிபீடியாவின் பயனர்களில் ஒருவராக ஆகிவிடலாம்.



புகுபதிகை

இதன் பிறகு புகுபதிகைப் பக்கத்திற்குச் சென்று நாம் பயனர் கணக்கு தொடங்கும் போது கொடுத்த பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் போன்றவைகளைக் கொடுத்து சொடுக்கினால் தமிழ் விக்கிப்பீடியாவில் நமக்கான பயனர் வழியில் உள்ளே சென்று விடலாம். நாம் புகுபதிகை செய்து உள்ளே நுழைந்த பின்பு தமிழ் விக்கிப்பீடியாவின் மேல்பகுதியில் நமது பயனர் பெயர், என்பேச்சு, என் விருப்பத்தேர்வுகள், என் கவனிப்புப் பட்டியல், என் பங்களிப்புகள், விடுபதிகை போன்ற தலைப்புகளில் சிறு குறிப்புச் சொற்கள் இடம் பெற்றிருக்கும்.

இதில் பயனர் பெயர் என்ற தலைப்பில் சொடுக்கி நம்மைப் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்து வைக்கலாம். நமது புகைப்படத்தை விரும்பினால் இங்கே வலையேற்றம் செய்து வைக்கலாம். மேலும் நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்த விபரம், இனம் குறித்த விபரம் போன்ற கூடுதல் தகவல்களை அளிக்கும் வார்ப்புருக்களை விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.

என் விருப்பத் தேர்வுகள் என்ற தலைப்பில் சொடுக்கி நாம் அளிக்க விரும்பும் கட்டுரைகள் சார்ந்த துறைகள் குறித்த குறிப்புகளை இங்கேப் பதிவு செய்து கொள்ளலாம். இதுபோல் என் கவனிப்புப் பட்டியல் எனும் தலைப்பில் சொடுக்கி அதில் நாம் அளித்த கட்டுரைகள் முழுமையடையாமல் இருப்பின் அது குறித்த தகவல்கள், விரிவாக்கப்பட வேண்டிய குறுங்கட்டுரைகள் குறித்த தகவல்கள் மற்றும் விக்கிப்பீடியாவில் நாம் அளிக்க உள்ள கட்டுரைகள் குறித்த தகவல்கள் போன்ற குறிப்புகளை நம் கவனிப்பிற்காக அங்கே பதிவுசெய்து வைத்துக் கொள்ளலாம்.

என் பங்களிப்புகள் பக்கத்தில் நம் பயனர் வழியைப் பயன்படுத்தி நாம் செய்த பங்களிப்புகள் குறித்த கட்டுரை தலைப்பு, நாள், நேரம் மற்றும் அனைத்துத் தகவல்களும் அங்கே தானாக இடம் பெற்றுவிடும். இந்தப் பக்கத்திலிருந்து விடுபதிகையைச் சொடுக்கினால் நாம் நம் பயனர் பயன்பாட்டிலிருந்து விடுபட்டு விடலாம்.

புகுபதிகை செய்தபின்பு தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்திலோ அல்லது வேறு பக்கங்களிலோ நாம் இருக்கும் போது மேல் பக்கத்தில் நமது பயனர் பெயர், என்பேச்சு, என் விருப்பத்தேர்வுகள், என் கவனிப்புப் பட்டியல், என் பங்களிப்புகள், விடுபதிகை போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருக்கிறதா என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அவை இருந்தால் மட்டுமே நாம் அளிக்கும் கட்டுரை நமது பங்களிப்பாக இடம் பெறும். அப்படி பயனர் வழியில் செய்யப்படாத பதிவுகள் அனைத்திலும் நாம் பயன்படுத்திய இணைய விதிமுறை இலக்கம் (Internet Protocol (IP) Number) பதிவு செய்யப்படும். மேலும் ஒவ்வொரு பதிவுக்கும் ரகசியக் குறியீடுகள் கொடுக்கப்பட்டு அந்தக் குறியீடுகளை நாம் உள்ளீடு செய்த பின்புதான் கட்டுரை சேமிக்கப்படும். ஆனால் பயனர்கள் வழியாகச் செய்யும் பதிவுகளில் பயனர் பெயர் இடம்பெறும். இதில் ரகசியக் குறியீடுகள் எதுவும் உள்ளீடு செய்ய வேண்டியது இருக்காது.



கட்டுரை எழுதுவது எப்படி?

நாம் கட்டுரை எழுதுவதற்கு முன்பு எம்மாதிரியான கட்டுரையை தமிழ் விக்கிபீடியாவிற்கு எழுதலாம்? தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்ற நடையில் எப்படி அளிப்பது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் எழுத நினைத்திருக்கும் தலைப்பை தமிழ் விக்கிப்பீடியாவின் இடது பக்கத்தில் இருக்கும் தேடுக எனும் தலைப்பிலான பகுதியில் உள்ள காலிக்கட்டத்தில் உள்ளீடு செய்து அதன் கீழ் உள்ள செல் எனும் இடத்தில் வைத்துச் சொடுக்கினால் நாம் கொடுத்திருக்கும் தலைப்பிலான கட்டுரை முன்னரே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் அந்தக் கட்டுரைக்கான பக்கம் திரைக்கு வந்து விடும். இல்லாவிடில் நாம் தேடிய பக்கம் எதுவும் இல்லை என்ற தகவலுடன் நாம் கொடுத்த தலைப்பு சிகப்பு நிறத்தில் தெரியும். மேலும் இந்தப்பக்கத்தை நீங்கள் உருவாக்கலாம் என்கிற குறிப்பும் தெரியும். சிகப்பு நிறத்தில் தெரியும் நாம் கொடுத்த தலைப்பின் மேல் சொடுக்கினால் அந்த கட்டுரைக்கான தொகுப்புப்பக்கம் தோன்றிவிடும்.

இந்தப் பக்கத்தில் நாம் கட்டுரையைத் தமிழில் தட்டச்சு செய்துவிடலாம். மேலும் கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்ற வகையில் அளிக்க சில குறியீடுகள் அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தடிமனான எழுத்துக்களுக்கு ‘’’ ’’’ என்ற குறியீடும், துணைத் தலைப்புகளுக்கு == == என்ற குறியீடும், துணைத்தலைப்பின் கீழான உள் தலைப்புகளுக்கு === === என்ற குறியீடும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் வார்ப்புருக்கள், கோப்புகள் போன்றவைகளை அளிக்க பல தகவல்கள் தமிழ் விக்கிபீடியாவின் மணல் தொட்டிப் பகுதியில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பக்கத்திற்குச் சென்று சில முக்கியத் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். மிகவும் எளிமையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறிப்புகள் நமக்கு அவ்வப்போது உதவுகிறது. மேலும் இந்த கட்டுரை தொகுப்பில் அவ்வப்போது வரப்பெற்ற சந்தேகங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவை தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடி பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொண்டால் நமக்கு ஓரளவு இது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.



கட்டுரையில் நாம் சொல்ல விரும்பும் அனைத்துத் தகவல்களுடன் அவற்றிற்கேற்ற துணைத் தலைப்பு, உள் தலைப்பு போன்றவைகளுடன் செய்தால் கட்டுரை சிறப்பாக இருக்கும். மேலும் இந்தக்கட்டுரைக்கு வார்ப்புரு எனும் அட்டவணை போன்ற பகுதி தேவையிருப்பின் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். வார்ப்புரு உருவாக்கும் எளிமையான முறை தமிழ் விக்கிபீடியாவின் மணல்தொட்டி பகுதியில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் புகைப்படம் அல்லது படங்கள் அவசியம் என்று கருதும் நிலையில் அந்தப் புகைப்படத்தை முதலில் விக்கிப்பீடியாவின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு வலையேற்றம் செய்ய வேண்டும். இதற்கு தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துப் பக்கங்களிலும் இருக்கும் கருவிப்பெட்டி எனும் தலைப்பின் கீழான “கோப்பைப் பதிவேற்று” எனும் தலைப்பில் சொடுக்கி அந்தப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அந்தப் பக்கத்தில் இருக்கும் தேடுதல் மூலம் நாம் கணிப்பொறியில் வைத்திருக்கும் தேவையான படத்தைத் தேர்வு செய்து அதற்கான பெயரிட்டு குறிப்புகள் அளித்து படத்திற்கு தமிழ் விக்கிப்பீடியாவின் பட்டியலில் இருக்கும் காப்புரிமைக்கான விபரத்தைத் தேர்வு செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் நடைமுறைகளுக்கு ஒப்புதல் அளித்து படத்தை வலையேற்றம் செய்து விடலாம். அதன் பிறகு வலையேற்றம் செய்யப்பட்ட படத்தை கட்டுரைக்குத் தேவையான இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக்கட்டுரைக்கு ஆதாரமானவற்றை ஆதாரம் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கலாம். இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய இணையப் பக்கங்களின் முகவரிகளை வெளி இணைப்பு எனும் தலைப்புக் கொடுத்து அங்கிருந்து இணைப்பு செய்து விடலாம்.

கட்டுரை எந்தத் தலைப்பின் கீழான பகுப்பில் இடம் பெற்றிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு விடலாம். கட்டுரை எந்த பகுப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பதை தேர்வு செய்ய பகுப்புப் பட்டியல்களை முன்கூட்டியே பார்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் முழுமையாகச் செய்து பக்கத்தைச் சேமிக்கவும் பக்கத்தைச் சொடுக்கினால் கட்டுரையின் முழுப்பகுதியும் இடம் பெற்றுவிடும். இந்தக் கட்டுரையைப் பகுதி பகுதியாகக் கூடத் தயாரித்துக் கொள்ள முடியும்.

உலகம் முழுவதும் உள்ள பயனர்களால் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்ட புதிய கட்டுரைகள், முன்புள்ள கட்டுரைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், பதிவேற்றப்பட்ட கோப்புகள், ஒரு சில கட்டுரை குறித்த உரையாடல்கள் போன்றவை குறித்த தகவல்கள் அனைத்தும் அண்மைய மாற்றங்கள் எனும் பக்கத்தில் உடனுக்குடன் இடம் பெற்றுவிடுகின்றன. தமிழ் விக்கிபீடியாவின் அனைத்துப் பக்கங்களிலும் இடது புறத்தில் இடம் பெற்றிருக்கும் வழி செலுத்துதல் எனும் தலைப்பின் கீழான அண்மைய மாற்றங்கள் எனும் தலைப்பில் சொடுக்கி இதைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் அது உடனடியாக தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி என்பவரால் நீக்கப்பட்டு விடும். கட்டுரை கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்டதாக இருந்தால் நடுநிலைமை கருத்து வரவேற்கப்பட்டு அதன் பின்பு மாற்றமோ அல்லது நீக்கமோ செய்யப்படலாம்.



கட்டுரையில் மாற்றம்

தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் மாற்றங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. கட்டுரையில் மேலும் பல தகவல்களைச் சேர்க்கவும் மாற்றங்கள் செய்யவும் தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துப் பயனர்களுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரையில் எப்போது வேண்டுமானாலும் யாராலும் மாற்றங்கள் செய்யப்படலாம். நாமே கட்டுரையில் மீண்டும் மாற்றங்கள் ஏதும் செய்ய விரும்பினால் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். இதுபோல் பிற கட்டுரைகளில் சில தகவல்களைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று கருதினால் நாமும் மாற்றங்கள் செய்யலாம்.

ஒவ்வொரு கட்டுரையின் மேல் பகுதியில் கட்டுரை, உரையாடல், தொகு, வரலாறு என்ற தலைப்புகள் இடம் பெற்றிருக்கும். இதில் உரையாடல் எனும் தலைப்பைச் சொடுக்கி அந்தப் பக்கத்தில் கட்டுரை குறித்த சந்தேகங்கள் இருந்தால் உதவச் சொல்லிக் கேட்கலாம். தவறுகள் இருந்தால் அதைச் சுட்டிக் காட்டலாம். இதற்கு பயனர் நிர்வாகியால் உதவிகள் கிடைக்கும். மேலும் கட்டுரை குறித்த சிறப்புகளைக் குறிப்பிடலாம். தொகு எனும் தலைப்பைச் சொடுக்கினால் கட்டுரையின் முழுமைப் பகுதியாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றம் செய்து கொள்ளலாம். பகுதியாக மாற்றம் செய்து கொள்ள கட்டுரையின் துணைத் தலைப்புகளின் வலது புறத்தில் இருக்கும் தொகு எனும் தலைப்பைச் சொடுக்கி மாற்றம் செய்து கொள்ளலாம். கட்டுரையில் வரலாறு எனும் தலைப்பின் கீழ் கட்டுரையில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்கள், மாற்றம் செய்யப்பட்ட நாள், நேரம் மற்றும் பங்களிப்பு செய்தவர்கள் குறித்த தகவல்கள் தானாகவே இடம் பெற்று விடுகின்றன.

இந்த தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் பங்களிப்பு செய்தவர் குறித்த விபரங்கள் கட்டுரைக்கான வரலாறு பக்கத்தில் மட்டுமே இடம் பெறுகிறது. மேலும் கட்டுரைகளை அளிக்கும் பயனர்களுக்கோ பயனர் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கோ எவ்விதமான பரிசுகளோ அல்லது நன்கொடையோ அளிக்கப்படுவதில்லை. இருப்பினும், தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பயனர்கள் மற்றும் பயனர் நிர்வாகிகள் போன்றவர்களால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் அதிகமாகத் தொகுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மேல் ஆர்வமுடையவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதலாமே?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p25.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License