வடமொழி எனப்படும் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றில் ஒரே வடிவமுடையனவாக வழங்கப்படும் சொற்கள் ஒலி விடிவில் ஒற்றுமைப்பட்டிருப்பினும்,வெவ்வேறு பொருள்களைக் குறிக்கின்றன.
இந்த அறியாமையைப் பலர் அறிவதில்லை. நிகர்வடிவமுடைய சமஸ்கிருதத்தின் தென்மொழிச் சொற்கள், முரணான பொருளில் வழங்குவதைப் பின் வரும் பட்டியலில் காணலாம்.
| வ. எண் |
வடமொழி (சமஸ்கிருதம்) சொல்லும் பொருளும் |
தமிழ் மொழி சொல்லும் பொருளும் |
| 1 |
உத்தியோக - முயற்சி |
உத்தியோகம் - வேலை |
| 2 |
உபந்யாச - நாவல், புதினம் |
உத்தியோகம் - வேலை |
| 3 |
கல்யாண் - நல்ல, மங்கள |
கலியாணம் - திருமணம் |
| 4 |
சரித்ர - ஒழுக்கம் |
சரித்திரம் - வரலாறு |
| 5 |
சேஷ்டா - முயற்சி |
சேஷ்டை - கெட்ட நடவடிக்கை |
| 6 |
பிரசங்கம் - முன்பின் சந்தர்ப்பம் |
பிரசங்கம் - சமயச் சொற்பொழிவு |
| 7 |
பத்ர - மென்மையான |
பத்திரம் - சாக்கிரதை |
| 8 |
ம்ருக - மான் |
மிருகம் - விலங்கு |
| 9 |
விலாஸ் - சுகபோகமான |
விலாசம் - முகவரி |
| 10 |
சங்கதி - தொடர்பு |
சங்கதி - செய்தி |
| 11 |
சம்சார் - உலகம் |
சம்சாரம் - மனைவி |
| 12 |
சமாதான் - ஐயங்களை விளக்குதல் |
சமாதானம் - ஒத்துப் போதல் |
| 13 |
சாது - சந்நியாசி |
சாது - எளியவன், சரளமானவன் |
| 14 |
அபராத் - குற்றம் |
அபராதம் - தண்டனை |
| 15 |
ஆதர - மரியாதை |
ஆதரவு - துணை |
| 16 |
பாச - பயிறு |
பாசம் - பற்று |
| 17 |
பிரச்ன - கேள்வி |
பிரச்சினை - சிக்கலான செய்தி |
| 18 |
ஆலய - இடம் |
ஆலயம் - கோயில் |
| 19 |
காய - சரீரம் |
காயம் - புண் |
| 20 |
நீர - தண்ணீர் |
நீர் - நீங்கள் |
| 21 |
பத்ர - இலை, கடிதம் |
பத்திரம் - விலைச்சீட்டு |
| 22 |
பிரமாத் - சோம்பேறித்தனம் |
பிரமாதம் - நன்றாக |
| 23 |
யோஜனா - திட்டம் |
யோசனை - சிந்தனை |
| 24 |
ரண - போர் |
ரணம் - காயம் |
| 25 |
துவார் - வாயில் |
துவாரம் - சந்து |
| 26 |
அன்னம் - சமைத்த சாதம் |
அன்னம் - அன்னப் பறவை |
| 27 |
வயிராகி - பற்றற்றவன் |
வைராக்கியம் - மன உறுதி |
| 28 |
வைபவ - செழிப்பு |
வைபவம் - குடும்ப நிகழ்வு |
| 29 |
சர - அம்பு |
சரம் - மாலை தொடுக்கும் நூல் |
| 30 |
சாலா - கூடம் |
சாலை - பாதை |
| 31 |
ஸ்ருங்கார் - இன்பச் சுவையுள்ள |
சிங்காரம் - அழகுபடுத்தல் |
| 32 |
சமய் - காலம் |
சமயம் - மதம் |
| 33 |
சகாய - உதவி |
சகாயம் - மலிவான |
| 34 |
சித்தி - ஆன்மிக வெற்றி |
சித்தி - தாயின் தங்கை |
| 35 |
காதக் - கொள்பவன் |
காதகன் - பொறாமைக்காரன் |
| 36 |
பசு - பிராணி |
பசு - பசு மாடு |
| 37 |
மணி - இரத்தினம் |
மணி - காலம் |
| 38 |
சமாச்சார் - உயர்ந்த ஒழுக்கம் |
சமாச்சாரம் - செய்தி |
| 39 |
அகம் - ஆணவம் |
அகம் - உள்ளே (வீடு) |
| 40 |
கேவல் - தனியே |
கேவலம் - இழிந்த |
| 41 |
புருஷ் - ஆண் மகன் |
புருஷன் - கணவன் |
| 42 |
விகட் - மிகக் கடுமையான |
விகடம் - நகைச்சுவை |
| 43 |
அவதி - எல்லை |
அவதி - துன்பம் |
| 44 |
விஜய் - வெற்றி |
விஜயம் - வருகை |
| 45 |
விஷய - ஐம்பொறிகளால் நுகரும் பொருள்கள் |
விஷயம் - செய்தி |
| 46 |
ஆலோசனா - திறனாய்வு |
ஆலோசனை - யோசனை கேட்பது |
| 47 |
ஆஸா - நம்பிக்கை |
ஆசை - விருப்பம் |
| 48 |
நிர்வாணம் - முத்தி, வீடுபேறு |
நிர்வாணம் - ஆடையற்ற நிலை |
| 49 |
நாம் - பெயர் |
நாமம் - திரிபுண்டரம் அணிதல் |
| 50 |
காலக்ஷேப - காலத்தைக் கழிப்பது |
காலட்சேபம் - சமயச் சொற்பொழிவு |
| 51 |
முத்ரா - நாணயம் |
முத்திரை - சின்னம் |
| 52 |
மாத்ரா - அளவு |
மாத்திரை - மருந்து |
மேலே கண்ட அட்டவணையில் இரு மொழிச் சொற்கள் ஒன்று போல் தோன்றினாலும், பொருள் வேறாக இருக்கிறதல்லவா?