Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 10
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கொன்றைவேந்தன் காட்டும் நல்லறம்

கவிஞர் இரா. இரவி


ஔவையார் பாடிய ‘கொன்றை வேந்தன்’ குழந்தைகளுக்கு என்று பெரியவர்கள் படிப்பதில்லை. கொன்றை வேந்தன் பொருள் புரிந்து, கூர்ந்து படித்தால் வாழ்க்கைக்கு வழி காட்டும். ஒளி கூட்டும். கொன்றை வேந்தனிலிருக்கும் 91 கருத்துக்களும் அருமை என்றாலும், ஒரு மனிதனுக்குத் தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள் எவை என்று ஆராய்ந்த போது எனக்குக் கிடைத்ததை உங்கள் பார்வைக்கு:

கீழோ ராயினுந் தாழ உரை

உனக்குக் கீழ்ப்பட்டவரிடத்தும் பணிவாகப் பேசு.

அலுவலகங்களில் தனக்கு மேலுள்ள அதிகாரிகளிடம் அளவிற்கு அதிகமாகப் பணிந்து பேசுவது, தனக்குக் கீழுள்ள பணியாளர்களிடம் அதிகாரம் செய்வது, ஆணவமாகப் பேசுவது நாட்டில் நடந்து வரும் நடப்பு. ஆனால், ஔவையார் சொல்கிறார்; உன்னை விடப் படிப்பில், பணத்தில், பதவியில் கீழுள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்கள் நம்மை மதிப்பார்கள். ஆணவமாக நடந்து கொண்டால் மதிக்க மாட்டார்கள். இந்த உளவியல் ரீதியான உண்மையை ஒற்றை வரியில் உணர்த்தி உள்ளார்.

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

பொருளை இழந்த போதும் மனம் தளராமல் இருந்தால் செல்வம் மீண்டும் வரும்.

தொழில் நட்டம் ஏற்பட்டால் சிலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்காக தன்னம்பிக்கை தரும் விதமாக வைர வரியாக, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கை வழிமொழிவது போல ஔவையார் எழுதி உள்ளார்.



கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

கையில் உள்ள செல்வப் பொருளைக் காட்டிலும் கல்விப் பொருளே சிறந்தது.

செல்வத்தை விட கல்வியே சிறந்தது என்பதை கல்வெட்டு வரிகளாக வடித்து உள்ளார். மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பார்கள். அது போல மனதை தூய்மையாக வைத்துக் கொண்டால் வாழ்க்கை இனிக்கும். காந்தியடிகளின் குரங்குகள் சொல்வதைப் போல கெட்டதை பார்க்காமல், பேசாமல், கேட்காமல் வாழ்வது நன்று. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எப்பாடுபட்டாவது கல்வி கற்று விட்டால் பின்னர் வாழ்க்கை வளமாகும். அழியாத சொத்து கல்வி, கல்வியின் மேன்மையை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார்.

சூதும் வாதும் வேதனை செய்யும்

வஞ்சகமும், வழக்கும் துன்பத்தை உண்டாக்கும்.

ஒரு குரு ஆற்றை கடக்க தத்தளித்த இளம்பெண்ணிற்கு உதவி செய்து விட்டு நடந்து வந்தார். சீடன் கேட்டார், குருவான நீங்கள் இளம்பெண்ணை தொட்டு உதவியது சரியா? என்று கேட்டார். என் மனதில் எந்தவித அழுக்கும் இல்லை, அந்த இளம்பெண்ணை கரையில் விட்டு விட்டு நான் வந்து விட்டேன் . உன் மனதில் அழுக்கு இருப்பதால் நீ தான் இன்னும் எண்ணத்தில் இளம்பெண்ணை சுமந்து கொண்டு இருக்கிறாய் என்றார். சீடன் தலை குனிந்தார். மனதை மாசற்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று குட்டிக்கதையில் சொன்ன கருத்தினைப் போல், மனத்தாலும் பிறருக்குத் தீங்கு நினைக்காமல் வாழ்வாங்கு வாழ ஒரு வரியில் வழி சொல்லி உள்ளார்.

சோம்பர் என்பவர் சோம்பித் திரிவர்

சோம்பல் உடையவர் வறுமையில் வாடி அலைவர்.

வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி சுறுசுறுப்பு. மிகச்சிறிய எறும்பு தன்னைவிட அதிக எடையுள்ள பொருளையும் சுறுசுறுப்பாக இழுத்துச் செல்லும் காட்சி பாருங்கள். மழைக்காலத்திற்காக இப்போதே சேமித்து வைக்கும் எறும்பு. ஒழுங்காக வரிசையாகச் செல்லும் எறும்புகளிடம் கூட நாம் சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்ளலாம். சிறிய எறும்பு கற்பிக்கும் சுறுசுறுப்பு.

இந்த வாழ்க்கையை சுறுசுறுப்பானவர்கள் பொற்காலம் என்கின்றனர். சோம்பேறிகள் போர்க்களம் என்கின்றனர். விடிந்த பின்னும் எழாமல் வாழ்க்கை விடியவில்லை என்று சொல்லிவிட்டுத் தூங்கிடும் சோம்பேறிகள் உள்ளனர். எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடாமல் சுறுசுறுப்பாக உடனுக்குடன் செய்து முடிக்கும் எண்ணம் வேண்டும். முன்னேற்றத்திற்கு முதல் தடை சோம்பேறித்தனம் தான். அதனை மிக அழகாக ஔவையார் உணர்த்தி உள்ளார்.



தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல்லை விட மேலான அறிவுரை இல்லை. தந்தை மகனை விட வயதிலும், அறிவிலும் மூத்தவர். அவர் அனுபவத்தின் அடிப்படையில் கூறும் நல்ல ஆலோசனைகளை ஏற்று நடந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும். வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும் தந்தையின் பேச்சை மதித்து நடந்தவர்கள் தான் என்பது வரலாறு.

இன்றைய இளைய தலைமுறையினர் பெற்றோர் பேச்சைக் கேட்பது இல்லை. கேட்டு நடந்தால் வாழ்க்கை வசப்படும். எந்த ஒரு பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்குக் கெட்டதைச் சொல்ல மாட்டார்கள், கெட்டுப் போகவும் சொல்ல மாட்டார்கள். நல்லது மட்டுமே சொல்வார்கள் என்பதை குழந்தைகள் உணர வேண்டும். செவி மடுக்க வேண்டும். விளையாட்டுத்தனமாக வாழ்வதை விட்டு விட வேண்டும் என்பதை எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை

தாயைக் காட்டிலும் வேறு கோயில் இல்லை. தாயை மதித்து நடந்தால், மரியாதை தந்தால், தாய் மனம் மகிழும். பெற்ற மனம் மகிழந்தால் குழந்தைகளின் வாழ்க்கை செழிக்கும்.

இந்த உலகில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை இல்லை. தாய், என்றும் தன் மகனை வெறுப்பதே இல்லை. அளவற்ற அன்பு செலுத்தும் உயர்ந்த உள்ளம். தான் பசியில் வாடினாலும் தன் பிள்ளையின் பசி போக்கி மகிழும் தியாகத்தின் திருஉருவம் அன்னை. மகனால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் வாடும் அன்னை கூட மகனைத் திட்டுவதில்லை. என் மகன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்றே வாழ்த்துகின்றார். நன்றி மறந்த மகனையும் மன்னிக்கும் உயர்ந்த குணம் அன்னைக்கு உண்டு. சிலர் அன்னையை மதிக்காமல், கவனிக்காமல் ஆலயத்திற்குப் பணம் செலவு செய்வார்கள், காணிக்கை இடுவார்கள், சிலர் பணம் செலுத்தித் தங்கத்தேர் கூட இழுப்பார்கள். ஆனால், அவர்களுக்குப் பாடம் புகட்டுவதாக ஔவை சொன்னதில் பொருள் உள்ளது.

தீராக் கோபம் போராய் முடியும்

தணியாத கோபம் சண்டையில் கொண்டு நிறுத்தும். நானே பெரியவன் என்ற அகந்தையின் காரணமாகவே கோபம் வருகின்றது. விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும், சுவைக்கும். இயேசு சொன்னார், ‘ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னம் காட்டு’ என்று. ஆனால் இன்று மறு கன்னம் காட்ட யாரும் தயாராக இல்லை, ஆனால் திருப்பி அடிக்காமல் பொறுமை காத்தால் போதும், நாட்டில் அமைதி நிலவும்.

நம்மையே கொல்வது சினம். கோபம் கொடியது, கோபத்தால் தான் பலரது வாழ்க்கை அழிந்தது. கோபத்தால் தான் பல போர்கள் மூண்டது. பல்லாயிரம் உயிர்கள் மாண்டது. அதனால் கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமை கடலினும் பெரியது என்றார்கள் பெரியோர்கள்.



நுண்ணிய கருமம் எண்ணித் துணி

சிறிய செயலையும் ஆராய்ந்து செய்க என்கிறார் ஔவை.

ஆராய்ந்து செய்தால் அல்லல் இருக்காது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் ஆராய்ந்து முன்கூட்டி திட்டமிட்டுச் செயல்படுத்தினால் அந்தச் செயல் செம்மையாக முடியும்.ஓர் ஊருக்குச் செல்வதாக இருந்தால் அந்த ஊருக்குச் செல்ல எத்தனை மணிக்கு தொடர்வண்டி, முடிந்தால் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டுப் பயணப்பட்டால் பயணம் இனிதே அமையும். திட்டமிடுதல் அவசியம்.

நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு

அறநூலில் சொல்லப்பட்ட முறைகளைத் தெரிந்து நல்வழியில் நட.

அறநூல்கள் படிப்பதோடு நின்று விடாமல் படித்தபடி வாழ்வாங்கு வாழ்வது அழகு.

நைபவ ரெனினும் நொய்ய உரையேல்

நலிந்தவரிடத்தும் சிறுமையான சொற்களைக் கூறாதே.

சிலருக்கு பணக்காரர் என்ற செருக்கு இருப்பதுண்டு. ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பதும், பேசுவதும் உண்டு. மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கும் விதமாக ஔவை சொல்லி உள்ள சொல் சிந்தனைக்கு உரியது.



நோன்பென்பதுவே கொன்று தின்னாமை!

எந்த உயிரையும் கொல்லாமையும் அதன் ஊனைத் தின்னாமையுமே விரதமாகும்.

இன்று மருத்துவர்கள் சைவ உணவே உடல்நலத்திற்கு நல்லது என்று பரிந்துரை செய்கின்றனர். நாற்பது வயது ஆகிவிட்டால் அசைவ உணவை தவிர்த்திடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர். ஆனால் ஔவை அன்றே பாடி உள்ளார் பாருங்கள்.

இதனை ஒட்டிய கருத்தை திருவள்ளுவரும் திருக்குறளில் கூறி உள்ளார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த மனிதனை எல்லா உயிர்களும் கைகூப்பு வணங்கும். மனிதர்கள் வணங்குவார்கள் என்று சொல்லாமல் எல்லா உயிரும் கைகூப்பி வணங்கும் என்கிறார் வள்ளுவர்.

பையச் சென்றால் வையற் தாங்கும்

பண்பாக நடந்து கொண்டால் உலகத்தார் பாராட்டுவர்.

பண்பாக நடந்து கொண்டால் பார் போற்றும் நல்லவன் என்று பெயர் எடுக்க காலம் எடுக்கும். ஆனால், கெட்டவன் என்ற பெயர் எடுக்கச் சில நொடி போதும். காந்தியடிகள் இறந்து பல ஆண்டுகள் கடந்த போதும் இன்றும் மக்களால் மதிக்கப்படுகிறார் என்றால் காரணம் அவரது உயர்ந்த பண்பு. பண்பாளர் என்று எடுத்த நல்ல பெயர். காந்தியடிகள் உயிர் வாழாவிட்டாலும் பலரின் உள்ளங்களில் வாழ்கிறார் காரணம் பண்பு. காந்தியடிகளை உலகமே பாராட்டி மகிழ்கின்றது. காந்தியடிகள் அஞ்சல்தலை வெளியிடாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல நாடுகள் வெளியிட்டுள்ளன.

பொல்லாங்கு என்பவை யெல்லாந் தவிர்

தீயன என்று கூறும் அனைத்தையும் நீக்கி விடு.

எல்லோருக்கும் மனசாட்சி என்ற ஒன்று உண்டு. அந்த மனசாட்சி, தீங்கு என்றால், இது தீங்கு, வேண்டாம் என்று அறிவுறுத்தும், அதன்படி கேட்டு நடந்தால் வாழ்வில் துன்பம் வரவே வராது. சிலர் மனசாட்சிக்கு மாறாக தீயசெயல் புரிவதால்தான் தண்டனை பெற்று, துன்பத்தில் பின் ஏன் செய்தோம்? என்று வருந்துவார்கள். தீயவழியில் செல்லாதே! நல்லதை நினை, பேசு, நட என்பதை ஔவையார் மிக அழகாக உணர்த்தி உள்ளார்.



போகை மென்பது தானுழந் துண்டல்

உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவாகும்.

உழைத்தால் தான் பசி எடுக்கும், பசி அந்த பின் உண்டால் தான் செரிக்கும், உழைத்து பின் உண்பதே சாலச்சிறந்தது. அதனால் தான் உழைக்காமல் உட்கார்ந்து உண்டால் சொத்து அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்தார்கள். ‘உழைக்காமல் உண்பவன் திருடன்’ என்றார் காந்தியடிகள். உடல் உழைப்போ, மூளை உழைப்போ தமக்கு முடிந்த உழைப்பை செய்து விட்டுத்தான் உண்ண வேண்டும். இந்தக் கருத்தை ஔவை அன்றே பாடியுள்ளார் பாருங்கள்.

ராக்பெல்லர் என்ற பெரிய பணக்காரர் விமானத்தில் வானில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவர் அருகில் இருந்த இளைஞர் கேட்டான். நீங்கள் பெரிய பணக்காரர், இந்த வயதிலும் உழைக்க வேண்டுமா? என்று கேட்டான். அதற்கு ராக்பெல்லர் கேட்டார். விமானம் வானத்தில் பறக்கிறது, விமானத்தின் எஞ்சினை நிறுத்தி விடலாமா? என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் சொன்னான். விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என்றான். அதுபோலதான் மனிதனும் மூச்சு உள்ளவரை உழைக்க வேண்டும் என்றார் ராக்பெல்லர்.

மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்

பெரியோர் சொன்ன அறிவுரை அமுதம் போல் இன்பமாகும்.

வீட்டில் பெரியவர்கள் பேசினால் மதிப்பதே இல்லை. பெரிசு ஏதாவது உளரும் என்பார்கள். ஆனால் பெரியவர்கள் அனுபவ அறிவின் காரணமாக பல பயனுள்ள அறிவுரை தருவார்கள். நாம் அதனைக் கேட்டு நடந்தால் நல்லது. துன்பம் நேராமல் இருக்க பெரியோரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும். பெரியவர்கள், இளையவர்களை நெறிப்படுத்துவார்கள், ஆற்றுப்படுத்துவார்கள், அறவழியில் நடந்திட அறிவுறுத்துவார்கள். இதனைத்தான் ஔவையாரும் அன்றே வலியுறுத்தி உள்ளார்.

ஊக்கமுடைமை ஆக்கத்தற் கழகு

மனம் தளராமை எல்லா முன்னேற்றமும் தரும்.

மனம் என்பது மகாசக்தி! மனதை வலிமையாக வைத்துக் கொண்டால் மாமலையும் ஒரு கடுகு தான். தோல்விக்க்கு துவளாத நெஞ்சம் வேண்டும். என்னால் முடியும் என்றே முயன்றால் நினைத்தது முடியும். சராசரி அல்ல, நான் சாதிக்கப் பிறந்தவன், நான் என்ற நெருப்பு நெஞ்சில் இருந்து கொண்டே இருந்தால் சாதனை நிகழ்த்திட முடியும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை ஔவையின் வைர வரிகள் உணர்த்துகின்றன.



வெள்ளைக்கிலை கள்ளச் சிந்தை

தூய மனமுடையவரிடத்தில் வஞ்சகம் தோன்றாது.

சிந்தனை சிறப்பாக இருந்தால் செயலும் சிறப்பாக இருக்கும். நல்லதை மட்டுமே நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும். இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால், உடன் மறைக்காமல் என்ன நினைத்தேன் என்பதை சொல்ல வேண்டும், அப்படி உடன் உண்மையாக வெளிய சொல்லக்கூடிய நல்லதை மட்டுமே மனம் நினைக்க வேண்டும். நமது உள்ளம் வெள்ளைத் தாளாக இருக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் என்ற அழுக்கு தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் திருவள்ளுவர் திருக்குறளில்,

மனத்துக்கண் மாசிலன் ஆதால் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற!

ஒருவன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் என்கிறார்.

கொன்றை வேந்தன் சிறுவர்களுக்கான பாட நூல் என்று பெரியவர்கள் பலர் படிப்பதே இல்லை. கொன்றை வேந்தன் ஆழ்ந்து, புரிந்து படித்தால் வாழ்வியல் கருத்துக்களின் சுரங்கமாக உள்ளதை அறிய முடியும். தமிழ் இலக்கியமான கொன்றை வேந்தனில் சொல்லாத கருத்துக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்தும் சொல்லி உள்ளார் ஔவையார்.

திருக்குறளை அரங்கேற்றம் செய்திட திருவள்ளுவருக்கு உதவியவர் ஔவையார் என்ற கருத்தும் உண்டு. திருக்குறள் அளவிற்கு கொன்றை வேந்தனிலும் அரிய பல ஒப்பற்ற கருத்துக்கள் உள்ளன. வள்ளுவப் பெருந்தகை ஒன்றே முக்கால் அடிகளில் சொன்ன கருத்துக்களை பெண்பாற் புலவரான ஔவையார் ஒரே அடியில் பொட்டில் அடித்தாற்போன்று நயம்பட பாடி உள்ளார். ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பாரதி பாடிய புதுமைப்பெண்ணாக அன்றே ஔவை அறிவார்ந்து சிந்தித்து அற நூல் எழுதி உள்ளார்.

அவ்வையும் திருவள்ளுவரும் சமகாலம் என்பதால் திருக்குறளைன் தாக்கம் கொன்றை வேந்தனிலும், கொன்றை வேந்தன் தாக்கம் திருக்குறளிலும் இருப்பதை உணர முடிகின்றது.

கொன்றை வேந்தன் படித்து, அதன்படி நடந்தால் வீட்டின் வேந்தனாக வாழலாம். நாடு போற்றும் நல்லவனாக வாழலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p56.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License