Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam

முத்து: 12 கமலம்: 12
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

சமையல்
அசைவச் சமையல்
Alexa Rank


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்கத் தொலைபேசியின் பிரயோகமும் அதனால் ஏற்படும் உளவியல் தாக்கங்களும்

திரவியராசா நிறஞ்சினி

உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் தத்துவ விழுமியக்கற்கைகள் துறை,
கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.


ஆய்வு அறிமுகம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் மனித சமூதாயம் தனது உள்ளங்கைக்குள் உலகைச் சுருக்கி வைத்துள்ள நிலையில் கையடக்கத் தொலைபேசிகள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குகின்றன. கையடக்கத் தொலைபேசியின் உருவாக்கமானது அனைத்து துறைகளிலும் ஊடுருவிப் பல மாற்றங்களுக்கு வழி சமைத்துள்ளது. மனித சமூதாயம் கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் பல உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உட்படுகின்றனர். இத்தகைய உளவியல் தாக்கத்தின் பிரதிபலிப்பு சமூகத்தில் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதாவது பயனை மட்டும் கருதிக் கையடக்கத் தொலைபேசியைப் பயனாளிகள் பயன்படுத்துவதனாலும், கையடக்கத் தொலைபேசியில் அதிகமான சமூக வலைத்தளங்களின் பாவனையாலும் மனித சமூதாயம் பல்வேறு வகையான மனஉளச்சலுக்கும், தாக்கங்களுக்கும் உள்ளாகின்றனர்.

கையடக்கத் தொலைபேசியின் பிரயோகத்தன்மையும் உளவியல் ரீதியிலான தாக்கங்களும்

பிரயோகத்தன்மை

* வினைத்திறனான குரல்வழி தொடர்பாடல்

* இருவழி தொடர்பாடல்

* குறுஞ் செய்தி (SMS) (உதாரணம் : தகவல் பரிமாற்றம்)

* காட்சிகளுடன் கூடிய தகவல் (MMS) (உதாரணம் : புகைப்படம், மற்றும் காட்சிப்படம் போன்றவற்றை இலகுவாக பரிமாறுதல்)

* குரல் பதிவு செய்தி (VOICE MESSAGE) - பரிமாற வேண்டிய தகவலினை குரல் பதிவு செய்து அதனை உரிய நபருக்கு அனுப்பி வைக்க முடியும்)

* ஒரே வேளையில் பலருடன் தொடர்பு (CALL CONFERENCE)

* புகைப்படக் கருவி (CAMERA) (உதாரணம் : Selfie)

* காட்சி மற்றும் குரல் பதிவு முறைகள் (VIDEO RECORDER , VOICE RECODER)

* குரல் பாடல், காட்சியுடன் கூடிய பாடல், திரைப்படங்கள் பதியும் முறைகள் (Mp3, MP4, FM, TV, SERVICE)

* கட்டணமற்ற தகவல் இறக்கு முறைகள் (BLETOOTH, INFRARED) (உதாரணம் : கட்டணமற்ற காட்சிப் படம், புகைப்படம் போன்றவைகளை இறக்கு முறைகள்)

* இணைய வசதிகள்

1. காட்சிகளுன் கூடிய அழைப்புக்கள் (3G/4G CONNECTION, VIDEO CALL)

2. காணொளிக் கருத்தரங்கு (Video Conference)

3. பொழுதுபோக்கு

4. அவசர அழைப்புக்கள்



உளவியல் ரீதியிலான தாக்கங்கள்


1. தரவிறக்கம் செய்யப்படும் மென்பொருட்கள் (Download Apps)

கையடக்கத் தொலைபேசியில் மேலதிகமான மென்பொருட்களைth தரவிறக்கம் செய்வதனால் மனித சமூதாயம் பல்வேறு உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உட்படுத்தப்படுகிறது. (உதாரணம் viber, whatsapp, imo, face book)

2.மென் பொருட்களோடு இணைந்து தரவிறக்கப்படும் வைரஸ்

கையடக்கத் தொலைபேசிகளில் தேவை கருதிய மென்பொருள்களின் தரவிறக்கங்களின் போது வைரஸ்களும் தரவிறக்கம் செய்யப்படுகின்றது. அதாவது பாதுகாப்பற்ற வலைத்தளங்களில் பிரவேசிப்பதன் வாயிலாக வைரஸ்கள் தரவிறக்கப்படுகிறது. இத்தகைய வைரஸ் பயனாளியின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை அழிக்கின்றது. இதனால் பயனாளி தமது முக்கிய நோக்கத்தை நிறைவு செய்ய முடியாமல் சங்கடப்படும் நிலை ஏற்படுகிறது.

3. சுயமி (Selfie)

கையடக்கத் தொலைபேசியில் அமைக்கப்பட்டுள்ள “சுயமி” (Selfie) மூலம் பல்வேறு வழிகளில் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் ஏற்படுகின்றது. ஒருவர் தம்மை தாமே புகைப்படம் எடுக்கும் பழக்கத்தினை தொடந்தும் செய்கின்ற போது தம்மை தாமே ஒரு உயரிய நிலையில் வைத்து நோக்கும் மனப்பான்மையுடையவராக மாற்றமடைவர். தனது எதிர்பார்ப்புக்கள் சீர்குலைகின்ற தருணத்தில் அவர் மனநிலை பாதிக்கப்படும். அத்துடன் சுயமி (Selfie) எடுப்பவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்பும் மனநிலை உடையவர்கள் என பெரும்பாலான ஆய்வுகள் நிரூபித்துள்ளமையினை காணலாம். மேலும் இந்தச் சுயமி (Selfie) மோகத்தின் அளவிற்கு எல்லையே இல்லை ஓடும் ரெயிலிலும், உயரிய கட்டங்களில் இருந்தும், ஆபத்து நிறைந்த இடங்களிலும் எந்தவிதமான பயமும் இன்றி சுயமி (Selfie) எடுக்கின்றனர். அது சில வேளைகளில் அவர்களின் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது. மேலும் சுயமி (Selfie) புகைப்படங்களினை ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அந்தப் புகைப்படம் குறித்து நண்பர்கள் மற்றும் பிறரின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறார்கள். இது ஒரு வகையான மனநோயாகவும் தற்போது மருத்துவ உலகில் ஆராயப்படும் விடயமாக உள்ளது.

4. ஆபாசத்திற்கு முதலிடம்

சமூக வலைத்தளங்களில் இன்று ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்புகள் பகிரப்படுகின்றன. இதனால் பயனாளிகள் மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர். ஆபாசமானக் காட்சிகளை விரும்பாத ஒரு நபர் அதனைப் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் விரும்பாவிட்டாலும், பின்னர் அதை விரும்பிப் பார்ப்பவராக மாறிவிடுவார். அத்துடன் இந்த சிந்தனை மேலோங்கும் சந்தர்ப்பத்தில் பயனாளி தவறான துஸ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியவராக மாற்றமடைவர்.



5. வன்முறைகளுக்கான தூண்டுகோலாக விளங்குதல்

உலகின் நிகழும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக ஓரளவுக்குப் பார்க்க முடிகிறது. இத்தகைய நிலை வன்முறைகளுக்கு வித்திடுகிறது. வன்முறைகளோடு கூடிய அறைகூவல்கள், எச்சரிக்கைகள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பரிதாப உணர்வுடைய கருத்துக்கள், வீடியோ இணைப்புக்கள் போன்றன பகிரப்படுவதன் மூலம் தனிப்பட்ட நபர்கள் அல்லது சமூதாயம் முதலியவற்றில் வன்முறை உணர்வை தூண்டிவிடுகிறது.

6. தவறான தகவல் வெளியீடு

சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தரவுகள் பதிவேற்றம் செய்வதன் மூலம், இதனால் வெளியீடு செய்யப்படும் தரவுகள் குறித்த உண்மையினைச் சற்று விளக்கமாக ஆராய வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

7. தேவையற்ற அரட்டைகள்

தேவையற்ற அரட்டைகள் ஒருவரை வெகுவாக உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்துகிறது. Facebook, Massenger போன்ற வலைத்தளங்களில் தேவையற்றவர்களின் அரட்டைகளுக்குக் குறைவிருக்காது. கேலி, கிண்டல் என்றவாறு ஒருவரின் மனம் நோகும்படி விளையாட்டாக செய்யும் சில விடயங்கள் பாதிக்கப்படும் பயனாளியைத் தற்கொலை செய்யும் உணர்வுக்கு தூண்டிவிடும்.

8. தொடர்புகளில் தாமதம்

சமூக வலைத்தளங்களில் வேறு நபர்களுடன் அரட்டை (chatting) செய்து கொண்டிருக்கும் போது குறித்த நபரை ஒருவர் அவசரமாக தொடர்பு கொள்ளும் போது அந்த நபர் தன்னுடைய கேளிக்கையான உரையாடலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பாராயின் தேவை கருதி தொடர்பு கொண்ட நபர் விசனப்படலாம். அதனால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும். மேலும் அரட்டை (chatting) செய்து கொண்டிருக்கும் நபர் தகவலைத் தெரிவிக்கத் தொடர்பு கொண்ட நபர் மீது கோப உணர்வினைச் சில வேளைகளில் வளர்த்துக் கொள்ளலாம். தன் சந்தோசத்தை அவர் கெடுப்பதாக நினைத்துக் கொள்ளலாம். இத்தகைய சிந்தனையின் வெளிப்பாடு உளவியல் தாக்கத்தின் பிரதிபலிப்பாகும்.

9. சமூக நல்லுறவு பாதிப்படைதல்

குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் தருணத்தில் பெற்றோர்கள் தங்களது நேரங்களைத் தமது பிள்ளைகளுடன் செலவிடத் தவறிவிடுகின்றனர். இதற்கு மாற்றீடாக குழந்தைக்குக் கைபேசிகளை உறவாக மாற்றிவிடுகின்றனர். இத்தகைய செயற்பாடு காலப்போக்கில் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு இடையில் விரிசல்களை ஏற்படுத்தவதோடு பல்வேறு வழிகளில் உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

10. பழிவாங்கும் உணர்ச்சி

சமூக வலைத்தளங்களில் ஒருவரின் அனுமதி இன்றி, அவரின் புகைப்படங்களினை வேறு நபர்கள் வேடிக்கையாகவும், பழிவாங்கும் கோப உணர்வுடனும், அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் பதிவேற்றம் செய்யும் போது குறித்த புகைப்படத்திற்குச் சொந்தமான நபர் இத்தகைய செயலால் மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.



11. ஏமாற்றம்

Photo Editor மூலமாக புகைப்படங்களை அழகாக மாற்றிப் பலரும் புகைப்படத்தை கவரும் வண்ணம் பதிவேற்றம் செய்வதை சிலர் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அதனை உண்மை என நம்பிக் காதல் வயப்பட்டு ஏமாந்து போன உள்ளங்கள் ஏராளம். இதனால் உளநிலை பாதிக்கப்பட்டவர்களும், உயிரினைத் துறந்தவர்களும் எண்ணில் அடங்காது.

12. செயல் பின்னடைவு

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதனால் தங்களது செயற்பாடுகளை சரிவர செய்ய முடியாமல் போகும் நிலை உருவாகிறது. இதனால் அவர்களின் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.

13. கற்றல் செயற்பாட்டில் பின்னடைவு

சிறுவயது முதல் கையடக்கத் தொலைபேசி தான் உலகம் என்று வளர்ந்த குழந்தைகள் பாடசாலை செல்லும் போது வேறுபாடுடைய செயற்பாடுடையவர்களாக மாறுகின்றனர். கையடக்கத் தொலைபேசி தான் உலகம் என்று வாழ்ந்த அவர்கள் சக மாணவருடன் பேசிப் பழகாமல் தனிமைப்பட்டு நிற்கும் நிலை அவர்களுக்கு உருவாகின்றது. இது கற்றல் செயற்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

14. குழந்தைகளின் விரக்தியான மனநிலை உருவாகுதல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசியில் பொழுதுபோக்குக்காக விளையாட்டுக்களை (GAMES) விளையாடும் போது அந்த விளையாட்டைத் தாம் எப்படியாவது பூர்த்தி செய்துவிட வேண்டும் என்ற மனநிலை உடையவர்களாக மாறுகின்றனர். அந்த இலக்கை அடையமுடியாத நிலையில் அவர்கள் மனமுடைந்து மன ரீதியாக தாக்கமடைகின்றனர்.

15. சுய மரியாதையை இழத்தல்

கையடக்கத் தொலைபேசி உபயோகத்திற்குப் பணம் மிகவும் முக்கியமானதாகும். ஒருவருடன் உரையாடுவதில் தொடங்கி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரிமாறுவது வரை கட்டணம் செலுத்த வேண்டும். கையடக்கத் தொலைபேசியில் சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதும் இவ்வாறு துண்டிக்கப்பட்ட மறுகணமே மனநிலை மாற்றமடையும். பணம் போதாமை காரணமாகவே அழைப்பு துண்டிக்கப்படுகின்ற போது யாரிடமாவது கடன் வாங்குவோமா? என்ற கேள்வி மனதில் எழும். இதனால் சுய கௌரவத்தை இழக்கும் நிலை உருவாகும்.



16. மோசடிகள்

இணையத்தின் மூலம் தேவையற்ற வலைத்தளங்களில் பிரவேசிப்பதனால் அதாவது மோசடி வலைத்தளங்களில் வங்கி கணக்கு இலக்கங்கள், தொலைபேசி இலக்கங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளீடு செய்வதற்கேற்ற வகையில் போலியான படிவங்களை உண்மை என நம்பி ஏமாந்து போகும் தருணத்தில் குறிப்பிட்ட நபர் உளவியல் தாக்கத்திற்கு உட்படுவார்.

17. புதுமைகளால் கவரப்படுதலும் பயன்படுத்த எண்ணுதலும்

வினைத்திறனான, அழகான, பெறுமதி மிக்க கையடக்கத் தொலைபேசிகளை ஒருவர் பயன்படுத்தும் மற்றொருவர் தம்மிடம் இது போன்றதொரு தொலைபேசி இல்லை என சிந்திக்கும் போதே உளவியல் தாக்கத்திற்கு உட்படுகிறார். அல்லது தன்னுடைய தேவைகளை நிறைவு செய்ய இது போன்ற ஒரு கருவி தம்மிடம் இல்லையே என்று வேதனை கொள்கிறார். இதனால் தான் விரும்பிய அந்தக் கருவி கிடைக்கும் வரை அவர் மனம் போராடி உளவியல் ரீதியான பாதிப்பை அடைகிறது.

முடிவுரை

இன்றைய வாழ்வில் மனிதனின் சகலவிதமான நடவடிக்கைகளிலும் ஊடுருவிக் காணப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியின் மூலம் வெளிப்படையாகப் பல நன்மைகள் கிடைத்தாலும், மனிதன் தன்னை அறியாமலேயே நாளாந்தம் பல உளவியல் தாக்கங்களுக்கும் ஏனைய பல நோய்களுக்கும் உள்ளாகின்றான். இதனை அறிந்து மனித சமூதாயம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டால் மாத்திரம் உளவியல் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

பரிந்துரைகள்

• கையடக்கத் தொலைபேசியில் அவசியமற்ற, பாலியல் ரீதியிலான மென்பொருள்களை தரவிறக்கம் செய்யமுடியாதவாறு புதிய செயற்திட்டங்களை உருவாக்குதல்.

• தவறான கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ இணைப்புக்கள் முதலியவைகளை வெளியீடு செய்யும் நபர்கள் தொலைபேசியைப் பாவிக்காத வகையில் அவரது கணக்கினை நிறுத்தும் செயற் திட்டங்களை அமுல்படுத்தல்.

• சமூக வலைத்தளங்களில் அதிகமான கணக்கினை உருவாக்கும் பயனாளிகளுக்கு மேலதிகக் கட்டணங்களை அறவிடுதல்.

• சமூக வலைத்தளங்களில் கணக்கினை உருவாக்கும் பயனாளிகள் குறித்த வலைத்தளத்தில் ஒரு கணக்கினை மாத்திரம் திறப்பதற்கு ஏற்ற வகையில் Finger Print முறையினை நடைமுறைப்படுத்தல்.

• அனுமதியின்றி நுழைய முடியாத வகையில் பாதுகாப்புக் குறியீடுகளை வலிமைப்படுத்தல்.

• கையடக்கத் தொலைபேசியின் பாவனை காரணமாக மனித சமூகம் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p11.html


ISSN 2454 - 1990
Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...

சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


மாத பலன்கள்
படைப்புகளுக்குப் பரிசளிப்பவர்கள்








சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License