இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

தமிழ்ப்பேழை: ஒருங்கிணைந்த மின்னகராதி ஓர் ஆய்வு


முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
உதவிப்பேராசிரியர்,
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை,
பெரியார் பல்கலைக்கழகம்,
சேலம்-636011, தமிழ்நாடு.

அறிமுகம்

அகராதி என்பது சொற்களை அ முதல் ன வரை அகரவரிசைப்படுத்தி விளக்கமளிக்கும் ஒரு நூல் என்பர். மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அகராதியை, ‘அகரமுதலி’ என்பார். அகராதிகள் தமிழ்-தமிழ்-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கிலம், தமிழ்-ஆங்கிலம்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் என்று பலவகைப்படும். சொற்களை அகரவரிசைப்படியும், அதன் விளக்கங்களையும் சொற்பயன்பாட்டையும் கொண்டுள்ள நூலே அகரமுதலி எனப்படும் என கேம்பிரிட்ஜ் லேனர்சு அகரமுதலியின் இரண்டாம் பதிப்பு கூறுகின்றது. தமிழில் அகராதி, அகரமுதலி, நிகண்டு ஆகிய சொற்களால் அகரமுதலிகள் குறிக்கப் பெற்றுள்ளன. சிதம்பரரேவணசித்தர் 1594 ஆம் ஆண்டில் உருவாக்கிய நிகண்டில் ‘‘அகராதி நிகண்டு’’ என்னும் பொருளில் குறிக்கப்பெற்றுள்ளது. அச்சு அகரமுதலிகள் இன்று மின்னகரமுதலியாய், அலைபேசி அகரமுதலியாய் வேர்விட்டு நிற்கின்றன. அச்சு ஊடகத்தில் தனக்கான இடத்தைக் கொண்டிருக்கும் அகரமுதலிகள் இணையத்தின் ஒருங்கிணைந்தச் செயற்பாட்டிற்கான முன்னெடுப்புகளையும் எதிர்காலவியலையும் தமிழ்ப்பேழை அகராதி சார்ந்து இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

ஒவ்வொரு நொடியிலும் பன்னூற்றுக்கணக்கான புதியக் கலைச்சொற்கள் உலக மொழிகளில் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு மொழியில் உள்ள சொற்களின் அகரமுதலி, அருங்கலைச்சொற்கள், சொற்பட்டியல், சொல்லடைவு ஆகியவற்றோடு, பிறமொழிச்சொற்களின் பொருளுக்கான தேவை நாளும் பெருகி வருகின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி தற்கால நுட்பங்கள் வரையிலான தமிழின் சொற்பட்டியலை அகரவரிசைப்படுத்தி, அவற்றிற்கு விளக்கமளித்து, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் அவற்றை விளக்குவதும், மொழிபெயர்ப்பதும், பல்லூடகத் திறப்பாடுடைய பன்மொழி அகரமுதலியைத் தமிழில் உருவாக்குவதும் வேர்ச்சொல் அடிப்படைகளை வழங்குதலும் தமிழுக்கு செய்ய வேண்டிய மிக தேவையானப் பணியாகும்.

அகராதி என்னும் தற்காலத்து வடிவத்திற்கு முன் பொது ஊழி 1500 ஆம் ஆண்டுக்கு முன்பே தமிழில் நிகண்டுகள் என்னும் படைப்புகளாக அகராதிகளின் இடத்தைப் பிடிதிருந்தன. இந்த நிகண்டுகளில் சொற்களுக்குச் செய்யுள் வடிவில் விளக்கங்கள் அளிக்கப் பெற்றிருக்கும். நிகண்டுகளைத் தமிழில் உரிச்சொற்பனுவல் என்றும் அழைத்துள்ளனர். நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள்களை அளிக்கின்றன. நிகண்டுகளில் திவாகர நிகண்டு பழமையான ஒன்றாகும், சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது, இதனை இயற்றியவர் திவாகர முனிவர்.

இவ்வாய்வில், தமிழில் உருவாக்கப்பெற்றுள்ள ஒருங்கிணைந்த அகராதியான தமிழ்ப்பேழையின் கூறுகள் ஒப்பாய்வு செய்யப்பெற்று ஒருங்கிணைந்த மின்னகராதிகளின் சிறப்புக்கூறுகளும், வளங்களும், எதிர்காலவியலும் ஆய்வு செய்யப்பெற்று பரிந்துரைகள் அளிக்கப்பெற்றுள்ளன.


குறிச்சொற்கள்

மின்னகரமுதலி, தமிழ் அகரமுதலி, தமிழ், தமிழ்க்கணிமை, தமிழ் வலைத்தளம், தமிழ் அகராதி, மின்னகராதி, தமிழ்ப்பேழை, தமிழில் ஒன்றிய அகராதி, தமிழில் ஒன்றிய அகரமுதலி, தமிழ் அருங்கலைச்சொற்கள், ஒருங்கிணைந்த அகராதி, பல்லூடக அகராதி, அகராதியியல், அகரமுதலியியல்

தமிழில் அகராதிகள்

வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு 1710 ஆம் ஆண்டில் வருகைப்புரிந்துள்ளார். வீரமாமுனிவரின் வருகைக்கு முன்பே தமிழில் அகராதி சார் வகைமைகள் நிகண்டுகள் என்னும் பெயரில் இருந்திருப்பினும், தமிழ் - தமிழ் அகராதிகள் எதுவும் இல்லை. வீரமாமுனிவர் சதுரகராதி என்ற பெயரில் முதல் தமிழ் - தமிழ் அகராதியை உருவாக்கினார். சதுரகராதியை 1732 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் நிறைவு பெற்றதாக அந்நூலின் இறுதியில் வீரமாமுனிவர் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி என்னும் அகராதி நூல் முதன் முதலில் 1919 ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது. பண்டைய நிகண்டு என்னும் வகைமை மாற்றமடைந்து, அகராதி என்பதான நூற்பிரிவுத் தமிழில் உருவாக வீரமாமுனிவர் அடிப்படைப் பணிகளைச் செய்துள்ளார்.

தமிழின் முதல் அச்சு அகராதி நூல் 1800 ஆம் ஆண்டில் வெளியானது. அகராதிகள் ஒரு மொழியினைச் செம்மையாகக் கற்கவும், பொருளைப் புரிந்துப் படிக்கவும் உதவுகின்றன. தற்போது தமிழில் 1200-க்கும் மேற்பட்ட அகராதி, கலைச்சொல் நூல்கள் வந்துள்ளன. கலைச்சொற்களும், பல்துறைப் புரிதலும் ஒரு துறை சார்ந்த தொடர்பிற்குப் பயன்படும் தனித்தன்மை வாய்ந்தச் சொற்கள் கலைச்சொற்கள் எனப்படும். சான்றாக, அச்சுத்துறையில் பயன்படுத்தப்படும் அச்சுப்பொறி (Printer), பக்கப்புனைவு, (Page Layout), பக்க விளிம்பு (Page Margin), வண்ணப்பக்கம் (Colour Page), வண்ண நிரப்பல் (Colour Filling) என்னும் சொற்கள். உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட அறிவுத்துறைகளில் நம்மால் இயன்றவரை கலைச்சொற்களை அறிந்து அதன் பொருளோடுப் பயன்படுத்துவது நம் வாழ்வினை மேம்படுத்த உதவும்.


தமிழ்ப்பேழை

தமிழ்ப்பேழை (MyDictionary.in) என்பது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்னகராதியாகச் செயல்படுகின்றது. இவ்வகராதியில் வானியல், மண்ணியல், மீனியல், கானியல், கணிப்பொறியியல் என 160-க்கும் மேற்பட்ட துறைகளுக்கான கலைச்சொற்கள் அளிக்கப்பெற்றுள்ளன. உலக அளவில் அகராதி வளங்களில் 22 ஆம் இடத்தில் இருந்த தமிழ் அகராதி வளங்களை எட்டாம் இடத்திற்கு தமிழ்ப்பேழை தற்போது மாற்றியுள்ளது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் உலக அளவில் 171 மொழிகளில் தமிழ் அகராதி வளங்களை முதலிடத்திற்கு வருவதற்குரியப் பணிகளை தமிழ்ப்பேழை செய்து வருகின்றது. இவ்வகராதியில் 14 இலட்சம் அடிப்படைச் சொற்களுக்கு 1.6 கோடி விளக்கங்கள் உள்ளன, தமிழ்ப்பேழை (MyDictionary.in) அகராதி ஓர் ஒருங்கிணைந்த அகராதியாக இணையத்தில் செயல்படுகின்றது. ஒருங்கிணைந்த அகராதி என்பது பல்வகை அகராதிகளின் அடிப்படைச் சொற்களையும் அதன் விளக்கங்களையும் எளிதில் முழுமையாக ஒற்றைத்தேடலில் ஒரேப்பக்கத்தில் அளிக்கும் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, முறை என்னும் சொல்லிற்கான விளக்கத்தைத் தமிழ்ப்பேழை அகராதியில் தேடினால், முறை என்னும் சொல்லில் 12 சொற்கள் தொடங்குகின்றன. முறை எனும் சொல் ஒருங்கிணைந்தத் தேடலாக 2124 முறை வருகின்றது. அச்சொல் தமிழின் இலக்கண, இலக்கியங்களில் எப்பொருளில் உள்ளது எனக்காட்டுவதோடு, முறை என்னும் சொல்லின் முன்னொட்டு, பின்னொட்டுகளுடன் தமிழ்ப்பேழையிலுள்ள 72 அகராதிகளில் என்னென்ன தலைச்சொற்கள் உள்ளன? அவற்றின் விளக்கங்கள் யாவை? என்பதை அளிக்கின்றது. தற்போது அதிகச்சொற்களுடன் திகழும் முதல் பெரிய தமிழ் அகராதித் தளமாகன தமிழ்ப்பேழை உருவாக்கப்பெற்றுள்ளது. உலக அளவில், இணையத்தில் தமிழை அதிகமான சொற்பதிவுகள் கொண்ட முதல் மொழியாக மாற்றும் எதிர்கால நோக்கில் இவ்வகராதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திலுள்ள அகராதிகள் யாவும் படைப்பாக்கப் பொதும உரிமத்தின் கீழ் (Creative Commons Attribution- ShareAlike License) வழங்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வகராதிகளின் வளங்களை யாவரும் பகிரலாம், சேமிக்கலாம், சான்றுகளுடன் மாற்றலாம். தமிழ்ப்பேழையின் செயற்பாடுகள் இத்தளம் தமிழின் இலக்கண, இலக்கிய அகராதிகளையும் அறிவியல், நுட்பியல் கலைச்சொற்களையும் ஒருங்கிணைத்துள்ளது. தொல்காப்பியம், அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், திருஅருட்பா ஆகிய நூல்களின் சொற்களை அதன் விளக்கத்துடனும் பாடல் எண்களுடனும் கலைச்சொற்களுடன் இணைத்துள்ளது.


பழமொழித் தரவுகள்

தமிழ்ப்பேழை அகராதியில் பழமொழித் தேடலுக்கான தேடுபொறி வாயிலாக (https://MyDictionary.in/பழமொழி-Proverb) மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பழமொழிகளைத் தேடுபொறிக்கு உகந்ததாக அளிக்க உள்ளது. தற்போது நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பழமொழிகளைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, 'மலை' என்றுத் தேடினால் 50 பழமொழிகள் மலை என்றுத் தொடங்குவதாகவும், மலை என்னும் சொல் உள்ள பழமொழிகள் என 104 எனவும் அறியலாம். இதனால் பல்வேறுப் பொருண்மைச் சார்ந்து மக்கள் வாழ்வில் பழமொழிகள் இடம்பெற்றுள்ளதை அறியலாம்.

விடுகதைக் களஞ்சியம்

தமிழ்ப்பேழைத் தளத்தில் (MyDictionary.in) ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விடுகதைகளைத் தொகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு குறிச்சொல்லை அளித்தால் அச்சொல் தொடர்புடைய விடுகதைகளை நாம் எளிதில் அறியலாம்.

நூல் தரவுகள்

தமிழ்ப்பேழைத் தளத்தில் நூல்நாடி என்னும் பகுதியில் நான்கு இலட்சம் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளத்தினை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு நூலினை அதன் பெயர், ஆசிரியரின் பெயர், பதிப்பகத்தின் பெயர், நூலின் பொருண்மை, நூல் வெளியான ஊர், நூலின் பதிப்பாண்டு என்னும் அடிப்படையில் முழுமையாக அறியும் வகையில் தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழிதழ்களின் தரவுகள்

தமிழில் வெளியான இதழ்களின் தரவுகள் 1802 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ப்பேழைத் தளத்தில் (MyDictionary.in) உருவாக்கப் பெற்றுள்ளன. இதன் வாயிலாக இதழின் பெயர், இதழாசிரியரின் பெயர், இதழின் பொருண்மை, இதழ் வெளியான ஊர், இதழ் வெளியான ஆண்டு என்னும் அடிப்படையில் அணுகலாம். இத்தரவுகள் பன்னோக்கமுடையப் பிணைப்புகளுடன் செயற்படுகின்றன.

திரைப்படங்களின் தரவுகள்

தமிழ்த்திரைப்படங்களின் தரவுகளை 1918 ஆம் ஆண்டில் இருந்து அறியும் வகையில் தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு திரைப்படத்தின் பெயர், அதன் நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளரின் பெயர், ஒளிப்பதிவாளரின் பெயர், அதன் பொருண்மை, கதை, திரைக்கதை, உரையாடல் எழுதியவர், படத்தின் சிறப்புத் தரவுகள், திரைப்படம் வெளியான ஆண்டு என்னும் அடிப்படையில் தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப்பேழையின் அகராதிகள்

தற்போது தமிழ்ப்பேழை அகராதியில் 72-க்கும் மேற்பட்ட அகராதிகள் தேடுபொறிக்கு உகந்ததாக அளிக்கப்பெற்றுளன.

அறிவியல் அகராதிகள்

இவ்வகைமையில் கலைச்சொல் பேரகராதி, தொகுதி 1, இயற்பியல் - (2008), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 1, வேதியியல் - (2008), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 14, சூழலியல் - (2011), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 14, புவியியல் - (2011),கலைச்சொல் பேரகராதி, தொகுதி 14, வானியல் - (2011), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 2, உயிரியல் - (2009) ஆகிய அகராதிகள் தேடுபொறிக்கு உரிய வகையில் அளிக்கப்பெற்றுள்ளன.

இலக்கண அகராதிகள்

இவ்வகைமையில் தொல்காப்பிய அகராதி (2004) இடம் பெற்றுள்ளது. இவ்வகராதியில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளச் சொற்களுக்கான விளக்கங்கள் பாடல் வரிகளுடன் இடம் பெற்றுள்ளன.

இலக்கிய அகராதிகள்

இலக்கிய அகராதிகள் என்னும் பிரிவில் அகநானூற்று அகராதி (2021), சிலப்பதிகார அகராதி (2022), திருக்குறள் அகராதி (1981), திருஅருட்பா அகராதி (2017), முல்லைப்பாட்டு அகராதி -(1903) ஆகியன அளிக்கப்பெற்றுள்ளன.

கணிதவியல் அகராதிகள்

கணிதவியல் என்னும் வகைப்பாட்டில் எண்ணியல் அகராதி (2021), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 1, கணிதவியல் (2008), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 1, புள்ளியியல் (2008) ஆகிய அகராதிகள் தேடுபொறிக்கு உரியதாக உள்ளன. கலை, வாழ்வியல் அகராதிகள்

கலை, வாழ்வியல் என்னும் பொருண்மையில் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் (1965), ஆட்சிச் சொல்லகராதி (பொது) (2015), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 10, ஆட்சியியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, அரசியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, சமூகவியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, நாட்டுப்புறவியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, பொருளியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, மானிடவியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, மெய்யியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, மொழியியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, வரலாறு (2010), சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி (2002), மொழியியல் கலைச்சொல்லகராதி (1980), வணிகத் தொடர்பான சொற் பட்டியல் (1996) போன்ற அகராதிகள் உள்ளன.

கல்வெட்டியல் அகராதிகள்

கல்வெட்டியல் தொடர்பாக கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, கல்வெட்டியல் (2010), கல்வெட்டுச் சொல்லகராதி (2011), தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் உள்ள அருஞ்சொற்பொருட்குறிப்பு ஆகிய அகராதிகள் அளிக்கப்பெற்றுள்ளன.


சட்டவியல் அகராதிகள்

சட்டவியல் அகராதிகள் என்னும் பிரிவில் கலைச்சொல் பேரகராதி, தொகுதி 10, சட்டச்சொல் (2010), சட்டச்சொல் அகராதி (2007) என்னும் அகராதிகள் உள்ளன. இதில் சட்டச்சொல் அகராதியில் சொற்கள் விளக்கப்பெற்றுள்ளன.

நுண்கலையியல் அகராதிகள்

நுண்கலையியல் என்னும் வகைமையில் 108 ஆடலியக்கத் தமிழ்ப்பெயரீடும் அமைவுகளும் (2004) என்னும் அகராதியில் பரதநாட்டியத்தின் அனைத்து அடவுகளும் கர்ணங்களும் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதத்தில் விளக்கப்பட்டுள்ளன.

பண்ணை அறிவியல் அகராதிகள்

பண்ணை அறிவியல் என்னும் வேளாண்மைசார் அகராதிகள், கலைச்சொல் அகராதி - கால்நடை வளம் (2004),கலைச்சொல் அகராதி - மீன் வளம் (2004), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 14, கானியல் (2011), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 2, கால்நடை வளம் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 2, மீன் இனப்பெயர்கள் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 2, மீன் வளம் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 2, விலங்கினப்பெயர்கள் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 7, வேளாண்மையியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 8, மனையியல் (2010), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 9, மனையியல் (2009), வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி (2003) என்பன அளிக்கப்பெற்றுள்ளன. வேளாண்மைசார் அகராதிகள் 50-க்கும் மேற்பட்ட அடிப்படைத்துறைகளுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறிய உதவுகின்றது.

பல்துறை அகராதிகள்

பல்துறை அகராதிகள் என்னும் வகைமையில் அருங்கலைச்சொல் அகரமுதலி (2002), தமிழ் தமிழ் அகராதி (1985), தமிழ்நாட்டுப்பாடநூல் கலைச்சொல் அகராதி (2021-2022), மதிப்பீட்டு கால புத்தகம் (2022), வெற்றி அகராதி (1995) போன்றவை உள்ளன.

பொறியியல் அகராதிகள்

பொறியியல் அகராதிகள் என்னும் வகைப்பாட்டில் அறிவியல் கலைச்சொல்லகராதி: பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள் (1997), கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி (1998), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 3, பொறியியல் தொழில்நுட்பம் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 4, பொறியியல் தொழில்நுட்பம் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 5, பொறியியல் தொழில்நுட்பம் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 6, தகவல் தொழில்நுட்பவியல் (2009), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 6, பொறியியல் தொழில்நுட்பம் (2009) ஆகிய அகராதிகளில் பொறியியல், நுட்பியல் துறைகளின் அருங்கலைச்சொற்களை அறியலாம்.

மருத்துவ அகராதிகள்

மருத்துவ அகராதிகள் என்னும் பிரிவில் கலைச்சொல் பேரகராதி, தொகுதி 11, உளவியல் (2011), கலைச்சொல் பேரகராதி, தொகுதி 11, மருத்துவவியல் - (2011), சித்த மருத்துவ அகராதி (1992), சித்த மருத்துவ அகராதி 2 (2008), சித்த மருத்துவ அகராதி 3 (2008), மருத்துவக் கலைச் சொற்கள் (2002), மருத்துவப் பெயரகராதி (1999), வருமக்கலை அகராதி (2024) என்று மருத்துவ கலைச்சொல் வளங்களை அறிந்து இத்துறையை வளமாக்கலாம்.

வணிகவியல் அகராதிகள்

வணிகவியல் அகராதிகள் என்னும் வகைப்பாட்டில் கலைச்சொல் பேரகராதி, தொகுதி 13, வங்கியியல் (2011), வணிகவியல் அகராதி (1994) என்னும் அகராதிகளைப் பெறலாம். அகரமுதலி வளங்களை மேம்படுத்துதல் குறித்த உள்ளுணர்வை தமிழ்ப்பேழையின் அகராதிப்பணிகள் வழங்குகின்றன.

தமிழ்ப்பேழையின் எதிர்காலவியல்

இத்திட்டம் இன்னும் நான்காண்டுகளில் 1.6 கோடிக்கும் மேற்பட்ட தலைச்சொல் பதிவுகள், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பழமொழிகள், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விடுகதைகள், நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் தரவுகள், பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படத்தின் தரவுகள், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களின் தரவுகள் போன்றவற்றினை அளிக்க உள்ளது. உயர்தனிச்செம்மொழியான தமிழின் அகராதி வளங்களை இணையத்தில் உலக அளவில் முதல் இடத்திற்குக் கொண்டுவரும் அரும்பணியை இத்திட்டம் முன்னெடுத்து வருகின்றது. தமிழின் சங்க இலக்கியம் முதல் தற்கால அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை என 150-க்கும் மேற்பட்ட துறைகளில் 1.6 கோடிகளுக்கும் மேற்பட்ட விளக்கங்களுடன் தமிழ் அகராதித் தரவுகளை இத்திட்டம் ஒருங்கிணைந்த முறையில் வலுப்படுத்தி வருகின்றது. நாளுக்குநாள் கலைச்சொற்கள் ஒவ்வொருத்துறையிலும் பெருகி வருகின்றன அதன் வேகத்திற்கேற்ப தமிழ்ப்பேழைத் தளத்தில் (MyDictionary.in) சொற்கள் சேர்க்கப்பெற்று வருகின்றன.

ஆய்வுமுடிபுகள்

1. தமிழ்ப்பேழைத்தளத்தில் ஒரு சொல் தனித்த முறையிலும் 72 அகராதிகளில் ஒருங்கிணைந்த முறையில் வடிவமைக்கப் பெற்றுள்ளதால், ஒரு சொல்லின் தனிப்பொருளும் ஒருங்கிணைப் பொருளும் எளிதில் அறியும் வகையில் உள்ளது.

தமிழ்ப்பேழை அகராதியில் உள்ள ஒவ்வொருச்சொல்லும் சான்றுகளுடன் அளிக்கப்பெற்றிருப்பதால் அவற்றின் காலநிலை ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் உள்ளது.

2. தமிழ்ப்பேழையில் ஒருங்கிணைக்கப் பெற்றுள்ள 72 அகராதிகளும் பொருண்மைசார் ஆய்வுகளுக்கு வழிவகுக்கின்றன.


பரிந்துரைகள்

1. ஆங்கிலத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ள கலைக்களஞ்சியங்கள், பட அகரமுதலிகளைப்போல தமிழின் அகரமுதலிகள் செம்மையாக தமிழ்ப்பேழைத்தளத்தில் நீண்டகால நோக்கில் உருவாக்கப் பெறவேண்டும் படம், காணொலி, அசைவுப்படம், ஒலிப்பு சார்ந்த அகரமுதலிகளின் உருவாக்கம் கற்றலில் சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் எனவே அவற்றினை இத்தளத்தில் சேர்க்க வேண்டும்.

2. தமிழில் உள்ள அருங்கலைச்சொற்கள் பல்லூடகத் தன்மையுடன் மின்னகரமுதலிகளாக மாற்றப்பெற்றால் அவை எளிமையான கற்றலுக்கு உறுதுணைபுரியக்கூடும்.

3. தமிழகப் பல்கலைக்கழகங்களில் அனைத்திலும் அகரமுதலித்துறை உருவாக்கப் பெற வேண்டும்.

4. தமிழ்ப்பேழைத் தளத்தின் உள்ளடக்கங்கள் அலைபேசி குறுஞ்செயலி வடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக அகரமுதலிகள் வெளியிட்டுள்ள வேர்ச்சொல் தரவுகள் இத்தளத்தில் வெளியிடப்பெற வேண்டும்.

6. தமிழக அரசின் சார்பியல் வெளியிடப்பெற்றுள்ள அனைத்து அகரமுதலிகளும் இத்தளத்தில் வெளியிடப்பெற வேண்டும்.

7. தமிழ்ப்பேழை மின்னகரமுதலிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவானதாக பல்லூடகப் புத்தாக்கம் பெற வேண்டும்.

8. தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ள அகரமுதலி நூல்கள் ஒருங்குகுறித் தமிழில் தமிழ்ப்பேழைத்தளத்தில் தேடுபொறிக்குரியாதாக வெளியிடப்பெறல் வேண்டும்.

9. படைப்பாகப் பொதும உரிமையின் கீழுள்ள தமிழ்-பிறமொழி அகராதிகள் தமிழ்ப்பேழைத் தளத்தில் சேர்க்கப்பெற வேண்டும்.

நோக்கீட்டுத் தரவுகள்

1. அருளி, ப., 2002, அருங்கலைச்சொல் அகரமுதலி, தமிழ் பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்.

2. மாதையன், பெ., 1997, அகராதியியல், தமிழ் பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்.

3. தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, 1985, ஜெயதேவன், வ. ஐந்திணைப் பதிப்பகம்.சென்னை,

4. https://MyDictionary.in/ பார்வையிட்ட நாள்: 02.06.2025.

5. http://ourdictionary.in/ பார்வையிட்ட நாள்: 11.05.2025.

6. http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ பார்வையிட்ட நாள்: 01.08.2025.

7. http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/ பார்வையிட்ட நாள்: 02.08.2025.

8.http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil பார்வையிட்ட நாள்: 04.09.2025.

9. http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/ பார்வையிட்ட நாள்:03.10.2025.

10. http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ பார்வையிட்ட நாள்: 05.08.2025.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p15.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License