நேர்காணல்...?
ஒரு நேர்காணலின் போது...
மேலாளர்: நான் சொல்றதுக்கு எதிர் வார்த்தையைச் சொல்லுங்க..!
பையன்: சொல்லுங்க நான் முயற்சி செய்கிறேன்..!
மேலாளர்: நல்லது...!
பையன்: கெட்டது...!
மேலாளர்: நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை
பையன்: நான் இப்போது தான் ஆரம்பித்தேன்!
மேலாளர்: இல்லைங்க...
பையன்: ஆமாங்க..!
மேலாளர்: நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டிங்க...
பையன்: நீங்க சரியா புரிஞ்சுகிட்டிங்க..!
மேலாளர்: பேச்சை நிறுத்து...
பையன்: தொடர்ந்து பேசு..!
மேலாளர்: இப்போ வாயை மூடுறியா இல்லையா...
பையன்: இப்போ பேசுறியா இல்லையா..!
மேலாளர்: நிறுத்துடா... எல்லாத்தையும்...
பையன்: தொடங்குடா... எல்லாதையும்...!
மேலாளர்: வெளியே போ...
பையன்: உள்ளே வா..!
மேலாளர்: ஐயோ கடவுளே...
பையன்: ஆஹா...பிசாசே...!
மேலாளர்: யு ஆர் ரிஜக்டட்...
பையன்: ஐ ஆம் செலக்டட்...!
(இணையத்தில் பார்த்தது)
இணையத்தில் பார்த்ததை அனுப்பியவர்:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.