முலாம் பழ சோடா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முலாம் பழம் - 1 எண்ணம்
2. சோடா - 1 கோப்பை
3. சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. முலாம் பழத்தை நறுக்கி, தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய முலாம் பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
3. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் சோடா கலந்து பருகலாம்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள், பிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டியோ அல்லது ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.