மாதுளை ஜீஸ்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. மாதுளம் பழம் - 2 எண்ணம்
2. சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
3. தேன் - 1 கரண்டி
செய்முறை:
1. மாதுளம் பழத்தைத் தோலுரித்து, அதனுள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும்.
2. விதைகளை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த விழுதை வடிகட்டிக் கொண்டு, தேவையான தண்ணீர், சர்க்கரை மற்றும் தேன் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள், பிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டியோ அல்லது ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.