நுங்கு சர்பத்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நுங்கு - 9 எண்ணம்
2. நன்னாரி சர்பத் - 1/4 கோப்பை
3. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
4. சர்க்கரை - 2 கரண்டி
செய்முறை:
1. நுங்கை தோல் உரித்து, அதனை மிக்சியில் போட்டு சொரசொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்து எடுத்த நுங்குடன் எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
3. அதனுடன் நன்னாரி சர்பத் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள், பிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டியோ அல்லது ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பருகலாம்.
*****