முருங்கை இலைச் சாறு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. . முருங்கை இலை - 2 கோப்பை
2. பூண்டு - 8 பற்கள்
3. சீரகம் - 2 தேக்கரண்டி
4. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
5. மிளகு - 2 தேக்கரண்டி
6. இஞ்சி - சிறு துண்டு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முருங்கை இலை, சீரகம், இடித்தப் பூண்டு, வெங்காயம், துருவிய இஞ்சி, மிளகு சேர்த்துக் கொதிக்க விடவும்.
2. சிறிது தண்ணீர் வற்றிய பின் அடுப்பை அணைத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3. சூடு விரும்புபவர்கள் வெதுவெதுப்பாக அருந்தலாம். இல்லையெனில் ஆற வைத்து அருந்தலாம்.
*****