நுங்கு சர்பத்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. நுங்கு - 4 எண்ணம்
2. நன்னாரி சர்பத் - 100 மி.லி
3. எலுமிச்சம்பழ சாறு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. நுங்குகளைச் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம்பழச் சாறு மற்றும் நன்னாரி சர்பத் கலந்து வைத்துக் கொள்ளவும்.
3. அதன் பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து அருந்தலாம்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் குளிரூட்டிப் பருகலாம் அல்லது பனிக்கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.