மாங்காய் சர்பத்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (நன்கு விளைந்தது) – 2 எண்ணம்
2. சர்க்கரை – தேவையான அளவு
3. உப்பு - தேவையான அளவு
4. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. நன்கு விளைந்த மாங்காயைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
3. வடிகட்டிய மாங்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
4. மாங்காய் வெந்து வரும் போது சீரகத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இறக்கவும்.
5. ஒரு கரண்டி மாங்காய் பாகு உடன் ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.