புளி அவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கெட்டி அவல் - 1 கப்
2. புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
3. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு
5. நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
தாளிக்க:
6. நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
7. கடுகு – 3/4 தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
9. கடலை பருப்பு – 1 மேஜைக்கரண்டி
10. வேர்கடலை – 2 மேஜைக்கரண்டி
11. சிகப்பு மிளகாய் – 3 எண்ணம்
12. பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
13. கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
1. சூடான தண்ணீரில், புளியை ஊற வைத்து கரைத்துப் புளிக்கரைசல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. அவலை நன்கு அலசி, அதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்கள் ஒவ்வொன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும்.
4. அத்துடன் ஊறிய அவலை அதில் சேர்க்கவும்.
5. ஒரு நிமிடம் வதக்கி, நன்கு சமன்படுத்தி மூடி வைத்து, குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
6. நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: புளித்தண்ணீர் சூடாக இருந்தால், அவல் விரைவாக ஊறிவிடும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.