பாசிப்பயறு பூசணிக்காய் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பயறு - 1 கப்
2. பூசணிக்காய் - 1 கீற்று
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சைமிளகாய் - 8 எண்ணம்
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. மல்லி - 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. பாசிப்பயறை குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
2. பூசணிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் சீரகம், மல்லி சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அதில் பூசணிக்காயை சேர்த்து வதக்கிப் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
7. பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த பாசிப்பயறை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.