மிளகு மோர்க் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மோர் - 500 மி.லி
2. மிளகு - 10 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
5. அரிசி - 1 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 1 கப்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மிளகு, மிளகாய் வற்றல், வெந்தயம், அரிசியை வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
2. இந்த விழுதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
3. அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுத் தாளித்து இறக்கி வைத்த மோரில் கலந்து பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.