பாசிப்பருப்பு குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாசிப் பருப்பு - 1 கப்
2. சின்ன வெங்காயம் - 6 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பூண்டு - 7 பல்
5. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
6. சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
7. மிளகாய் - 3 எண்ணம்
8. தேங்காய்த் துருவல்- 1 கப்
9. கடுகு -1 தேக்கரண்டி
10. சீரகம் - தேக்கரண்டி
11. எண்ணெய் -தேவையான அளவு
12. கருவேப்பிலை -சிறிதளவு
13. உப்பு -தேவையான அளவு
செய்முறை:
1. குக்கரில் பாசிப்பருப்பு, பூண்டு, தக்காளி மற்றும் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில்கள் வரை வேகவிடவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
3. அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும், வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. அத்தோடு மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
6. குழம்பு நன்றாக வெந்தவுடன், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.