பனீர் பட்டர் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பனீர் துண்டுகள் - 200 கிராம்
2. பெரிய தக்காளி - 2 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
6. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
7. சீரகத்தூள் - 1 மேசைக்கரண்டி
8. கரம்மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. முந்திரிப்பருப்பு - 6 எண்ணம்
10. மல்லித் தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
12. வெண்ணைய் - 3 மேசைக்கரண்டி
13. எண்ணைய் - 2 மேசைக்கரண்டி
14. பட்டை - சிறிது
15. கிராம்பு - 2 எண்ணம்
16. பிரிஞ்சி இலை - சிறிது
17. ஏலக்காய் - 2 எண்ணம்
செய்முறை:
1. பன்னீரை சதுரமாக வெட்டி வைக்கவும்.
2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணைய் போட்டுச் சூடானவுடன் பனீர் துண்டுகளைப் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வதக்கி வைக்கவும்.
4. அதே கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாகப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
5. ஆறியதும் தனித்தனியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
6. அடுப்பில் கடாயை வைத்து வெண்ணைய், எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போடவும்.
7. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
8. பிறகு வெங்காய விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
9. வதங்கியதும் தக்காளி விழுதைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
10. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
11. மசாலா வாடை அடங்கியதும் முந்திரிப்பருப்பு கலவை, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும்.
12. பிறகு பனீர் துண்டுகளைச் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
13. மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு
பனீர் பட்டர் மசாலா சப்பாத்தி, பரோட்டா, நான் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.