பீட்ரூட் ரசம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் - 1 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகு - 1/2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
7. எண்ணெய் - சிறிது
8. கடுகு - 1/4 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. பீட்ரூட்டைத் தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.
2. தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
3. ஒரு வாணலியில் அனைத்தையும் சேர்த்து, உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்த்து நுரை வரும் போது இறக்கவும்.
5. அதில் பொடியாக நறுக்கிய மல்லி இலையைத் தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.