பரோட்டா சால்னா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் - 1 எண்ணம்
2. தக்காளி - 3 எண்ணம்
3. இஞ்சி - 1 துண்டு
4. பூண்டு - 10 பற்கள்
5. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
6. புதினா - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
8. கருவேப்பிலை - சிறிது
9. பட்டை - 1 துண்டு
10. கிராம்பு - 3 எண்ணம்
11. ஏலக்காய் - 2 எண்ணம்
12. சோம்பு - 1 தேக்கரண்டி
13. மல்லி - 1 தேக்கரண்டி
14. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
15. மிளகு - 1/2 தேக்கரண்டி
16. தேங்காய் - 1/2 மூடி
17. மஞ்சள் தூள் - சிறிது
18. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
19. கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
20. சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி
21. உப்பு - தேவையான அளவு
22. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெட்ட வேண்டிய அனைத்துப் பொருட்களையும் வெட்டி வைக்கவும்.
2. ஒரு கடாயில் மல்லி, மிளகு, சோம்பு, மிளகாய்,தேங்காய் அனைத்தும் வறுத்து அரைத்து வைக்கவும்.
3. இஞ்சி, பூண்டு,வெங்காயம் ஆகியவற்றைத் தனியாக அரைத்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. அதில் தக்காளி, புதினா சிறிதளவு மல்லி இலை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
7. அதில் மசாலாப் பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பிறகு அதில் அரைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
9. நன்றாகக் கொதி வந்ததும் அதில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.