பச்சை மொச்சை குருமா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மொச்சைக்காய் - 300 கிராம்
2. தக்காளி - 2 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
5. பட்டை - 1 துண்டு
6. கிராம்பு - 3 எண்ணம்
7. சோம்பு - 1/2 தேக்கரண்டி
8. கசகசா - 1/2 தேக்கரண்டி
9. இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
10. மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
11. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
12. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
13. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
14. தேங்காய்ச் சில்லு - 2 எண்ணம்
15. நல்லெண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
17. கருவேப்பிலை - சிறிது
18. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. மொச்சைக்காயை உறித்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
2. மிக்ஸி ஜாரில் தேங்காய்ச்சில், கசகசா,பட்டைச் சேர்த்து அரைக்கவும்.
3. பிறகு அதில் சோம்பு, வெங்காயம்ச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு, சோம்பு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. அதில் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. பின் அதில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. பிறகு மஞ்சள், மல்லி, கரம் மசாலா, மிளகாய்த்தூள்கள் சேர்த்து வதக்கவும்.
8. அதில் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
9. அத்துடன் மொச்சைப் பயரைச் சேர்த்து வதக்கவும்.
10. பிறகு அளவாகத் தண்ணீர்ச் சேர்த்து, மூடி போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
11. எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும்.
12. அரைத்தத் தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும்.
13. அனைத்தும் ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலை, மல்லித்தழையைத் தூவி இறக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.