துவரங்காய் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரங்காய் - 1/2 கப்
2. வேகவைத்த துவரம் பருப்பு - 1 கரண்டி
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. புளித்தண்ணீர் - 2 கரண்டி
வறுத்து அரைப்பதற்கு:
5. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
6. மல்லி (தனியா) - 1 தேக்கரண்டி
7. சீரகம் - 1/4 தேக்கரண்டி
8. மிளகு - 6 எண்ணம்
9. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
10. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
11. தக்காளி (சிறியது) - 1 எண்ணம்
12. தேங்காய்த் துருவல் - 2 கரண்டி
தாளிக்க:
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. பெருங்காயம் - சிறிது
15. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
16. சின்ன வெங்காயம் - 6 எண்ணம்
17. தக்காளி (சிறியது) - 1 எண்ணம்
18. கறிவேப்பிலை - சிறிது
19. எண்ணெய் - தேவையான அளவு
20. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. துவரங்காயை குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. அதில் வேக வைத்த துவரங்காயைச் சேர்க்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வறுத்து அரைப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் போட்டு வறுத்து. ஆற வைத்து அதனை மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
6. உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது ஆகியவற்றைத் துவரங்காயோடு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
7. பிறகு இரண்டு கரண்டிப் புளித்தண்ணீர், ஒரு கரண்டி வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.