முட்டைக் கோஸ் கிரேவி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக் கோஸ் - 300 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. இஞ்சி பூண்டு விழுது = 2 தேக்கரண்டி
9. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
10. கருவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. புதினாத்தழை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
2. அதன் பிறகு, அதில் மசாலாப் பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பின்பு அதில் நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அதில் கருவேப்பிலை, மல்லித்தழை, புதினாத்தழை என்று அனைத்தும் சேர்த்து நன்றாகக் கிளறி நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.