அகத்திக்கீரை – ரத்தத்தைச் சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளிய வைக்கும்.
அரைக்கீரை – ஆண்மையைப் பெருக்கும்.
காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
குப்பைக்கீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
கொடிக் காசினிக் கீரை – பித்தம் தணிக்கும்.
கொடிபசலைக் கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.
சாணக்கீரை – காயம் ஆற்றும்.
சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயைக் குணமாக்கும்.
சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
தவசிக்கீரை – இருமலைப் போக்கும்.
துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
தும்பைக்கீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.
தூதுவளை – ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
நருதாளிக்கீரை – ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
பசலைக்கீரை – தசைகளைப் பலமடையச் செய்யும்.
பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பருப்புக்கீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
பிண்ணாருக்குக் கீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை – ரத்தத்தைச் சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.
புளிச்சக்கீரை – கல்லீரலைப் பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பொன்னாங்கன்னிக் கீரை – உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
மஞ்சள் கரிசலை – கல்லீரலைப் பலமாக்கும், காமாலையை விலக்கும்.
மணத்தக்காளிக் கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
முடக்கத்தான் கீரை – கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
முரங்கைக் கீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.
முருங்கைக் கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
முள்ளங்கிக் கீரை – நீரடைப்பு நீக்கும்.
மூக்கு தட்டைக் கீரை – சளியை அகற்றும்.
வல்லாரைக் கீரை – மூளைக்குப் பலம் தரும்.
விழுதிக் கீரை – பசியைத் தூண்டும்.
வெந்தயக் கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலைப் பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
வெள்ளை கரிசலைக் கீரை – ரத்தசோகையை நீக்கும்.
வெள்ளைக் கீரை – தாய்பாலைப் பெருக்கும்.