மசாலா தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு - 2 கப்
2. உருளைக்கிழங்கு - 250 கிராம்
3. மிளகாய் - 4 எண்ணம்
4. வெங்காயம் - 3 எண்ணம்
5. கருவேப்பிலை - சிறிது
6. மல்லிச்செடி - சிறிது
7. இஞ்சி - சிறு துண்டு
8. வறுகடலை - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. மிளகாய், இஞ்சியைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. வறுகடலையை மிருதுவாகப் பொடி செய்து வைக்கவும்.
3. உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து அரை குறையாக உதிர்த்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு இலேசாக வெங்காயத்தை வேக விடவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
6. தண்ணீர் சற்று வற்றியதும், உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்துக் கிளறி சற்று புரட்டினாற் போல் இறக்கிப் பொரிகடலை மாவைத் தூவிக் கிளறி வைக்கவும்.
7. தோசைக் கல்லில் தோசை மாவை ஊற்றி மெல்லியதாக விரித்து திருப்பிப்போட்டு பின் எடுக்கும் சமயம், பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கை வைத்து மறுபாதி தோசையினால் மூடி எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.