பிரெஞ்ச் டோஸ்ட்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பிரெட் - 10 எண்ணம்
2. முட்டை - 2 எண்ணம்
3. பால் - 1/2 கப்
4. சீனி - 4 மேசைக்கரண்டி
5. வெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.
2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் இட்டு, பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு இருபக்கமும் மொறு மொறு என்று சுட்டெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.