தேங்காய்த் தோசை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் - 2 எண்ணம்
2. பச்சரிசி - 4 கப்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் பச்சரிசியைக் குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
2. அதன் பிறகு, தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
3. அரிசி நன்றாக ஊறிய பிறகு தேங்காயையும், அரிசியையும் சேர்த்து நன்றாக அரைத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்திருக்கவும்..
4. மறுநாள் அந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து, தண்ணீர் விட்டுக் கஞ்சி போலக் காய்ச்சி மாவில் ஊற்றிக் கலந்து, அதில் சீரகத்தை போட்டு தோசை வார்க்கலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.