தக்காளி தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு - 1 கப்
2. தக்காளி (சிறியது) - 2 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
8. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் வெட்டி வைக்கவும்.
2. மிளகாய் வற்றலை இரண்டாக ஒடித்து வைக்வும்.
3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நெருப்பைக் குறைத்து வைத்து மிளகாய் வற்றலை வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
4. அதே எண்ணெயில் மிதமான நெருப்பில் வைத்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும் சீரகம், உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
7. வதக்கிய பொருள்களைச் சிறிது நேரம் ஆறவிடவும்.
8. நன்கு ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
9. அரைத்து எடுத்த விழுதைத் தோசை மாவோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும். (தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்)
10. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றித் தேய்க்கவும்.
11. தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.
12. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தக்காளி தோசைக்குத் தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.