பாசிப்பருப்பு தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 1 கப்
2. பச்சரிசி - 1/4 கப்
3. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
4. காய்ந்த மிளகாய் - 3 எண்ணம்
5. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
6. பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
1. அரிசி, பருப்பை நன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. அத்துடன் ஊறியப் பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
5. அரைத்த மாவுடன் தேங்காய்த் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கி கொள்ளவும்.
6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும், மாவை தோசைகளாக ஊற்றிச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு:இந்த தோசைக்கு புதினாத் துவையல், தக்காளிச் சட்னி அருமையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.